பொது செய்தி

இந்தியா

சர்ச்சை கருத்து: பாடலாசிரியர் வீட்டுக்கு பாதுகாப்பு

Updated : செப் 07, 2021 | Added : செப் 07, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
மும்பை-தலிபான் பயங்கரவாத அமைப்புடன் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தை ஒப்பிட்டு கருத்து வெளியிட்ட பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தருக்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இதையடுத்து மும்பையில் உள்ள ஜாவேத் அக்தர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாலிவுட்டைச் சேர்ந்த பிரபல பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், தலிபான்கள் குறித்து சமீபத்தில் கருத்து


மும்பை-தலிபான் பயங்கரவாத அமைப்புடன் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தை ஒப்பிட்டு கருத்து வெளியிட்ட பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தருக்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.



latest tamil news


இதையடுத்து மும்பையில் உள்ள ஜாவேத் அக்தர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாலிவுட்டைச் சேர்ந்த பிரபல பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், தலிபான்கள் குறித்து சமீபத்தில் கருத்து வெளியிட்டுஇருந்தார். மிகவும் தவறுஅதில், 'உலகெங்கும் உள்ள வலதுசாரிகளுக்கு இடையே ஒரு ஒற்றுமை உள்ளது. தலிபான்கள் இஸ்லாமிய அரசை உருவாக்க வேண்டும் என்கின்றனர்.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு ஹிந்து ராஜ்ஜியம் அமைக்க வேண்டும் என்கிறது' என, குறிப்பிட்டு இருந்தார்.இது குறித்து சிவசேனாவின் பத்திரிகையான 'சாம்னா'வில் வெளியிடப்பட்டு உள்ள கட்டுரையில் கூறப்பட்டு உள்ளதாவது:ஜாவேத் அக்தர் மதச்சார்பற்றவராக இருப்பதால் மத அடிப்படைவாதம் குறித்து பேசுகிறார். ஆனால் தலிபான் அமைப்புடன், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தை ஒப்பிட்டுள்ளது மிகவும் தவறு.ஹிந்து ராஷ்டிரம் அமைக்க வேண்டும் என கூறுபவர்களை, தலிபான் மனநிலையில் உள்ளனர் என எப்படி கூற முடியும். இதை ஏற்க முடியாது.ஹிந்து ராஜ்ஜியம் அமைக்க வேண்டும் என்று கூறுபவர்கள் மிதவாத ஹிந்துக்கள். நம் நாடு சுதந்திரம் பெற்றபோது, மதத்தின் அடிப்படையில் தான் பிரிக்கப்பட்டு பாக்., உருவானது.


latest tamil news


ஹிந்து ராஜ்ஜியத்துக்கு ஆதரவு அளிப்போர் கேட்பது, பெரும்பான்மையினராக உள்ள ஹிந்துக்களை ஒதுக்கி வைக்கக் கூடாது என்பது தான். கலாசாரம்ஹிந்துத்துவா என்பது ஒரு கலாசாரம்; இந்த கலாசாரத்துக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்பதே இந்த சமூக மக்களின் கோரிக்கை.உங்களுக்கு ஆர்.எஸ்.எஸ்., கொள்கை பிடிக்காமல் இருக்கலாம். அதற்காக தலிபான்களுடன், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தை ஒப்பிட்டுஉள்ளது மிகவும் தவறானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் தன்கருத்துக்கு ஜாவேத் அக்தர் மன்னிப்பு கேட்க வேண்டும் என, பல ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன. மும்பையில் உள்ள அவருடைய வீட்டுக்கு பாதுகாப்பு போடப்பட்டுஉள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Emesgee - Yokohama,ஜப்பான்
07-செப்-202111:07:11 IST Report Abuse
Emesgee திருட்டு பயல். உண்ட வீட்டுலயே குண்டு வைக்கிற பரதேசி இவன். ஆப்கானித்தானு போய் தைரியமிருந்தா அங்க போய் பாட்டு எழுது பக்கி.
Rate this:
Cancel
Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா
07-செப்-202110:33:20 IST Report Abuse
Sowdarpatti Rayarpadi Ramaswamy இவனை போலவே தமிழகத்தில் நிறைய தாலிபானிஸ்டுகள் உள்ளனர். இந்த தேசத்துரோகிவுடன் காஷ்மீர் மெகபூபா முப்தி சேர்த்து ஆப்கானிஸ்தானுக்கு துரத்த வேண்டும்
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-செப்-202110:22:50 IST Report Abuse
முக்கண் மைந்தன் இவருக்கு அந்தெ கோலி மாரோ குருப்புட்டேந்து அச்சுறுத்தலு இருக்குது
Rate this:
Nagarajan D - Coimbatore,இந்தியா
08-செப்-202108:56:53 IST Report Abuse
Nagarajan Dஅதை பற்றி குண்டு போட்டு கொள்ளும் ஒரு கூட்டம் பேசக்கூடாது, ஏண்டா நீங்க எங்கடா யாரையாவது நிம்மதியா வாழவிடுறீங்க.... நீங்க இருக்கும் எல்லா இடங்களிலும் உங்க தீவிரவாத புத்தியை தானே காட்டுறீங்க?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X