விநாயகர் சிலை பிரதிஷ்டைக்கு அனுமதி கொடுங்க! சப் - கலெக்டரிடம் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சிலை பிரதிஷ்டைக்கு அனுமதி கொடுங்க! சப் - கலெக்டரிடம் வலியுறுத்தல்

Added : செப் 07, 2021
Share
பொள்ளாச்சி:'விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து விழா கொண்டாடவும், ஊர்வலம் செல்லவும் அனுமதி அளிக்க வேண்டும்,' என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வழங்கப்பட்ட மனுக்கள்:* பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை தலைவர் நடராஜ் மற்றும் நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.
 விநாயகர் சிலை பிரதிஷ்டைக்கு அனுமதி கொடுங்க! சப் - கலெக்டரிடம் வலியுறுத்தல்

பொள்ளாச்சி:'விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து விழா கொண்டாடவும், ஊர்வலம் செல்லவும் அனுமதி அளிக்க வேண்டும்,' என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வழங்கப்பட்ட மனுக்கள்:* பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை தலைவர் நடராஜ் மற்றும் நிர்வாகிகள் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் வழங்கப்படும் சலுகைகள் பெறுவதற்கு, அடையாள அட்டையினை பெற, கோவை கலெக்டர் அலுவலகம் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.மாற்றுத்திறனாளிகள், கொரோனா பேரிடர் காலங்களில் மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மீண்டும் பொள்ளாச்சி மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவ சான்றிதழ், அடையாள அட்டையினையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதே போன்று, பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் முதல்வரின் உயிர் காக்கும் மருத்துவ காப்பீட்டு அட்டையினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.* கோவை புறநகர் தெற்கு மாவட்ட ஹிந்து மக்கள் கட்சி தமிழக நிர்வாகிகள் கொடுத்த மனுவில், 'தமிழக அரசு திருமணம் மற்றும் விசேஷங்கள் நடத்த அனுமதி அளித்துள்ளது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு மட்டும் உள்நோக்கத்துடன் அரசு தடை விதித்துள்ளது, ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து விழா கொண்டாடவும், ஊர்வலம் செல்லவும் அனுமதி அளிக்க வேண்டும்,' என, தெரிவித்துள்ளனர்.* தி.மு.க., கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கொடுத்த மனுவில், 'ஆனைமலை தாலுகா, திவான்சாபுதுார் ஊராட்சியில், காந்தி நகரில், 1996ம் ஆண்டு முதல், 22 குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஊராட்சியின் வீட்டு வரி மற்றும் மின்கட்டணம் செலுத்தி வருகின்றனர். எனவே, குடியிருப்பு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என, தெரிவித்துள்ளனர்.* ஆனைமலை, ஜல்லிபட்டி மஞ்சநாயக்கனுார் தன்னார்வலர் கொடுத்த மனுவில், ஜல்லிபட்டி ஊராட்சியில் நடக்கும் முறைகேடுகளை கண்டறிய வேண்டும். கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X