தென்னங்கன்றுகள் மானிய விலையில் வழங்க கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தென்னங்கன்றுகள் மானிய விலையில் வழங்க கோரிக்கை

Added : செப் 07, 2021
Share
உடுமலை:திருமூர்த்திநகர் தென்னை வளர்ச்சி வாரியத்தில், தரமான நாற்றுகள் உற்பத்தி செய்து, மானிய விலையில் வழங்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர்.மா.கம்யூ., கட்சி, பொன்னாலம்மன் சோலை கிளை மாநாடு நடந்தது. தேவராஜ் தலைமை வகித்தார். உடுமலை ஒன்றிய செயலாளர் கனகராஜ் பேசினார். இதில், தளி பேரூராட்சி பொன்னாலம்மன் சோலை, முள்ளுப்பட்டி பகுதிகளுக்கு பஸ் வசதி செய்து தரவும்,

உடுமலை:திருமூர்த்திநகர் தென்னை வளர்ச்சி வாரியத்தில், தரமான நாற்றுகள் உற்பத்தி செய்து, மானிய விலையில் வழங்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர்.மா.கம்யூ., கட்சி, பொன்னாலம்மன் சோலை கிளை மாநாடு நடந்தது. தேவராஜ் தலைமை வகித்தார். உடுமலை ஒன்றிய செயலாளர் கனகராஜ் பேசினார். இதில், தளி பேரூராட்சி பொன்னாலம்மன் சோலை, முள்ளுப்பட்டி பகுதிகளுக்கு பஸ் வசதி செய்து தரவும், முள்ளுப்பட்டியிலுள்ள மயானக்கரையை முறையாக பராமரித்து மண் அரிப்பு ஏற்படாமல் தடுப்புச்சுவர் கட்டித்தரவேண்டும்.முள்ளுப்பட்டியில் ஆரம்பப்பள்ளியில் சிதிலமடைந்துள்ள சத்துணவுக்கூடத்தை புதுப்பித்துத் தரவேண்டும். திருமூர்த்திநகரில் அமைந்துள்ள தென்னை வளர்ச்சிவாரியத்தில் தரமான தென்னைநாற்றுகள் நியாயமான விலையில் வழங்கிடவேண்டும். பால் உற்பத்தி விவசாயிகளுக்கு மானிய விலையில் மாட்டுத்தீவனம், உலர் தீவனங்கள் வழங்க வேண்டும்.மத்தாளப் பள்ளம் ஓடையில், மண்அரிப்பை தடுத்து தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நிர்வாகிகள், கோபால கிருஷ்ணன், காளியப்பன், ராஜகோபால், அருண்பிரகாஷ், பால தண்டபாணி, சின்னப்பன் , ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X