பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய் கோட்டத்தில் 24 பேருக்கு கொரோனா

Added : செப் 07, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று, 24 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட நியூ அழகப்பா லே - அவுட், முருகப்பா லே -- அவுட், ராமானுஜர் வீதி, அண்ணா காலனி, அமைதிநகர், ராஜீவ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம், ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, எஸ். சந்திராபுரம், கருப்பம்பாளையம்,

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று, 24 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட நியூ அழகப்பா லே - அவுட், முருகப்பா லே -- அவுட், ராமானுஜர் வீதி, அண்ணா காலனி, அமைதிநகர், ராஜீவ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம், ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, எஸ். சந்திராபுரம், கருப்பம்பாளையம், ஊஞ்சவேலாம்பட்டி, சின்னாம்பாளையம், நாயக்கன்பாளையத்தில் தலா, ஒருவர் என, மொத்தம், ஐந்து பேருக்கு கொரோனா உறுதியானது.வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, ரங்கம்புதுார், ஆச்சிபட்டி, புரவிபாளையத்தில் தலா, ஒருவர்; போத்தனுாரில், இரண்டு பேர் என, ஐந்து பேருக்கு கொரோனா உறுதியானது. பொள்ளாச்சி தாலுகாவில், 19 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.கிணத்துக்கடவு தாலுகாவில், செட்டிக்காபாளையத்தில் ஒருவருக்கு தொற்று பரவல் உறுதியானது. கிராமத்தில், 38 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஆனைமலை தாலுகாவில், நேற்று, ஆனைமலை, கோட்டூர், திவான்சாபுதுார், மீனாட்சிபுரம் பகுதிகளில், நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.வால்பாறை தாலுகாவில் நேற்று யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. அரசு மருத்துவமனை கேர் சென்டரில், இருவர் சிகிச்சையில் உள்ளனர்.வருவாய் கோட்டத்தில், நேற்று, 24 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. தொற்று பாதித்தவர்களுடன் தங்கியிருந்தவர்களை, சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி, பரிசோதனை மேற்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X