பொது செய்தி

தமிழ்நாடு

போலீசின் மனிதாபிமானம் நற்சான்று வழங்கிய எஸ்.பி.,

Added : செப் 07, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:அடையாளம் தெரியாத பிரேதத்தை நல்லடக்கம் செய்த, போலீஸ்காரரின் மனித நேயத்தை பாராட்டி, எஸ்.பி., நற்சான்றிதழ் வழங்கினார்.கிணத்துக்கடவு, தாமரைக்குளம், நரிக்குறவர்காலனி அருகில், கடந்த இரு நாட்களுக்கு முன், இரவு , 10:00 மணிக்கு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 55 வயது பெண் ஒருவர் இறந்தார். அவர் யாரென அடையாளம் தெரியவில்லை.கிணத்துக்கடவு போலீசார், பெண்ணின் பிரேதத்தை
 போலீசின் மனிதாபிமானம் நற்சான்று வழங்கிய எஸ்.பி.,

கிணத்துக்கடவு:அடையாளம் தெரியாத பிரேதத்தை நல்லடக்கம் செய்த, போலீஸ்காரரின் மனித நேயத்தை பாராட்டி, எஸ்.பி., நற்சான்றிதழ் வழங்கினார்.கிணத்துக்கடவு, தாமரைக்குளம், நரிக்குறவர்காலனி அருகில், கடந்த இரு நாட்களுக்கு முன், இரவு , 10:00 மணிக்கு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 55 வயது பெண் ஒருவர் இறந்தார். அவர் யாரென அடையாளம் தெரியவில்லை.கிணத்துக்கடவு போலீசார், பெண்ணின் பிரேதத்தை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவர் குறித்த தகவல் தெரியாத நிலையில், கிணத்துக்கடவு முதல்நிலை போலீஸ் செல்வகுமார், நேற்று முன்தினம் பெண்ணின் உடலை மயானம் கொண்டு சென்று அடக்கம் செய்தார்.போலீசின் இச்செயல், எஸ்.பி.,க்கு தெரிவிக்கப்பட்டது. மனிதாபிமான அடிப்படையில், பிரேதத்தை நல்லடக்கம் செய்த செல்வகுமாரை, எஸ்.பி.,செல்வநாகரத்தினம் பாராட்டி, நற்சான்றிதழ் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X