சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தலைமை ஆசிரியர் வீட்டில் 'ரெய்டு'

Added : செப் 07, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சேலம்-வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது, அரசு பணி வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்தது குறித்து, அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில், நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, ஆவணங்களை கைப்பற்றினர்.சேலம் மாவட்டம், மோரூரைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன், 50; ஆத்துார் ஆதிதிராவிடர் உறைவிடப் பள்ளியில், தலைமை ஆசிரியர். தற்போது, சேலம், நெடுஞ்சாலை நகரில் வாடகை வீட்டில்
 தலைமை ஆசிரியர் வீட்டில் 'ரெய்டு'

சேலம்-வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது, அரசு பணி வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்தது குறித்து, அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில், நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, ஆவணங்களை கைப்பற்றினர்.

சேலம் மாவட்டம், மோரூரைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன், 50; ஆத்துார் ஆதிதிராவிடர் உறைவிடப் பள்ளியில், தலைமை ஆசிரியர். தற்போது, சேலம், நெடுஞ்சாலை நகரில் வாடகை வீட்டில் வசிக்கிறார்.இவர், வாழப்பாடி அருகே உள்ள கருமந்துறை அரசு உறைவிடப் பள்ளியில், 2019ல் பணியாற்றிய போது, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு புகார்கள் சென்றன.

இதன்படி, வெங்கடேஸ்வரன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்தனர். நிர்வாக காரணங்களால், வெங்கடேஸ்வரனின் வீட்டில் ரெய்டு நடத்தி, விசாரணை நடத்த முடியாத நிலை இருந்தது.இந்நிலையில், அவர் மீதான வழக்கில் துரிதமாக விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்பு உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, டி.எஸ்.பி., கிருஷ்ணராஜ், இன்ஸ்பெக்டர் நரேந்திரன் தலைமையிலான போலீசார், வெங்கடேஸ்வரன் வீட்டில் நேற்று எட்டு மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தி ஆவணங்கள், நகை, பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

வெங்கடேஸ்வரன், அவரது மனைவி ரம்யா, 48 ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர்.சிக்கியது எப்படி?தலைமை ஆசிரி யர் வெங்டேஸ்வரன், அ.தி.மு.க., ஆட்சியின்போது, ஆதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜலட்சுமி மற்றும் உயர் அதிகாரிகளுடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டதாக புகார் உள்ளது.வெங்கடேஸ்வரனுக்கு வழங்கப்படும் மாத ஊதியம், கடன் பிடித்தம் உள்ளிட்ட விபரங்களை கடந்த பிப்., மாதம், லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிக்கையாக பெற்றனர். அப்போது வெங்கடேஸ்வரன், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது உறுதியானது. இதன் அடிப்படையில், நேற்று வெங்கடேஸ்வரன் வீட்டில் சோதனை நடந்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
David DS - kayathar,இந்தியா
10-செப்-202117:25:55 IST Report Abuse
David DS vaathiyaaare ippadi
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
08-செப்-202107:43:15 IST Report Abuse
meenakshisundaram சசிகலா -இவர் வீட்டின் மேல் நடந்த ரெய்டு -என்னாச்சு ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X