பிள்ளையார்பட்டியில் கஜமுக சூரசம்ஹாரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிள்ளையார்பட்டியில் கஜமுக சூரசம்ஹாரம்

Added : செப் 07, 2021
Share
திருப்புத்துார்--சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்திப்பெருவிழா ஆறாம் திருநாளை முன்னிட்டு நேற்று மாலை கோயிலினுள் கஜமுகசூரசம்ஹாரம் நடந்தது.இக்கோயிலில் சதுர்த்திப் பெருவிழா செப்.,1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டாம் நாள் முதல் காலையில் வெள்ளிக் கேடகத்தில் சுவாமி புறப்பாடும், இரவில் அலங்காரத்தில் விநாயகர் பிரகாரம் வலம் வருதலும்
 பிள்ளையார்பட்டியில் கஜமுக சூரசம்ஹாரம்

திருப்புத்துார்--சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்திப்பெருவிழா ஆறாம் திருநாளை முன்னிட்டு நேற்று மாலை கோயிலினுள் கஜமுகசூரசம்ஹாரம் நடந்தது.

இக்கோயிலில் சதுர்த்திப் பெருவிழா செப்.,1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டாம் நாள் முதல் காலையில் வெள்ளிக் கேடகத்தில் சுவாமி புறப்பாடும், இரவில் அலங்காரத்தில் விநாயகர் பிரகாரம் வலம் வருதலும் நடைபெற்றது. நேற்று மாலை 6:00 மணிக்கு கோயிலினுள் மூலவர் சன்னதிக்கு முன்பாக சண்டிகேஸ்வரருடன், வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. அடுத்து யானை முகத்தாலான அசுரனை விநாயகர் தனது தந்தத்தால் குத்தி வதம் செய்யும் கஜமுக சூரசம்ஹாரம் வைபவத்தை சிவாச்சார்யார்கள் நிகழ்த்தினர்.

தொடர்ந்து தங்க மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளினார். வழக்கமாக பக்தர்கள் ஆர்ப்பரிப்புடன் கோயில் குளத்தின் வடகரையில் நடைபெறும் சூரசம்ஹாரம் இம்முறை கொரோனா கட்டுப்பாடு வழிகாட்டுதலின்படி கோயில் வடக்கு மண்டபத்தினுள் நடந்தது. 9ம் திருநாளை முன்னிட்டு நடைபெறும் தேரோட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியன்று காலையில் தீர்த்தவாரி, மதியம் மூலவருக்கு முக்கூரணி மோதகம் படைத்தல், இரவில் ஐம்பெரும் கடவுளர்கள் எழுந்தருளல் நடைபெறும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X