பொது செய்தி

தமிழ்நாடு

விளம்பர பேனர்களை அகற்ற கலெக்டர் உத்தரவு

Added : செப் 07, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதி பெறாத விளம்பர பேனர்களை அகற்ற அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதி அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடந்தது.கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பேசியதாவது:விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதி பெறாத விளம்பர பேனர்களை அகற்ற அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதி அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடந்தது.கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பேசியதாவது:விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி பகுதிகளில் உள்ள அனுமதி பெறாத வியாபார நோக்க விளம்பரம், அரசியல் பிரமுகர் வருகை, திருமண விழா, மஞ்சள் நீர், பிறந்தநாள் என வைக்கப்பட்டுள்ள பேனர்கள் குறித்து கணக்கெடுப்பு எடுத்து அதை வரும் 20ம் தேதிக்குள் சம்மந்தபட்ட நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலர்கள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அகற்றிய விளம்பர பேனர்கள் குறித்த விபரத்தை தினமும் அறிக்கையாக சமர்பிக்க வேண்டும். நகராட்சி, பேரூராட்சிகளில் அகற்றிய விளம்பர பேனர்கள் குறித்து தினசரி அறிக்கையை மாவட்ட வருவாய் அலுவலரிடமும், ஊரக உள்ளாட்சி பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சமர்பிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.கூட்டத்தில், எஸ்.பி., ஸ்ரீநாதா, டி.ஆர்.ஓ., ராஜசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் சங்கர் உட்பட நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X