இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : செப் 07, 2021 | Added : செப் 07, 2021
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்தலைவலி மருந்தால் 'தலைவலி'; ரூ.4.27 லட்சம் இழந்தார் பெண்ராமநாதபுரம்--இணையதள நிறுவனத்தில் தலைவலி மருந்து வாங்கிய ராமநாதபுரம் பெண்ணிடம் நுாதன முறையில் ரூ.4.27 லட்சம் மோசடி செய்யப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேபொக்கரனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேலு. இவரது மனைவி பரமேஸ்வரி 43. நாப்டால் இணையதளம் மூலம் தலைவலி மருந்து
இன்றைய, கிரைம், ரவுண்ட், அப்


தமிழக நிகழ்வுகள்


தலைவலி மருந்தால் 'தலைவலி'; ரூ.4.27 லட்சம் இழந்தார் பெண்

ராமநாதபுரம்--இணையதள நிறுவனத்தில் தலைவலி மருந்து வாங்கிய ராமநாதபுரம் பெண்ணிடம் நுாதன முறையில் ரூ.4.27 லட்சம் மோசடி செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேபொக்கரனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேலு. இவரது மனைவி பரமேஸ்வரி 43. நாப்டால் இணையதளம் மூலம் தலைவலி மருந்து வாங்கியுள்ளார்.சில நாட்களுக்கு முன்பு அவருக்கு தபாலில் ரூ.12 லட்சம் பரிசு விழுந்திருப்பதாக கூப்பன் வந்துள்ளது. அதை உண்மை என நம்பியவர் அதில் குறிப்பிட்டிருந்த அலைபேசியில் தொடர்பு கொண்டார். அவருடன் பேசிய நபர் பரிசை பெறுவதற்கு வரி உள்ளிட்டவற்றை செலுத்த வேண்டும், அதற்கான தொகையை அனுப்புமாறுவங்கி கணக்கையும் அனுப்பியுள்ளார். அந்த நபர்கூறியபடி பல தவணைகளாக ரூ.4.27 லட்சத்தை அனுப்பியுள்ளார்.ஆனால், பரிசுப்பணம் பரமேஸ்வரி வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை. இதுகுறித்து கேட்க குறிப்பிட்ட அலைபேசியில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் பெண் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


latest tamil news


தலைமை ஆசிரியர் வீட்டில் ரெய்டு
சேலம்-வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது, அரசு பணி வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்தது குறித்து, அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில், நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, ஆவணங்களை கைப்பற்றினர்.

சேலம் மாவட்டம், மோரூரைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன், 50; ஆத்துார் ஆதிதிராவிடர் உறைவிடப் பள்ளியில், தலைமை ஆசிரியர். தற்போது, சேலம், நெடுஞ்சாலை நகரில் வாடகை வீட்டில் வசிக்கிறார்.இவர், வாழப்பாடி அருகே உள்ள கருமந்துறை அரசு உறைவிடப் பள்ளியில், 2019ல் பணியாற்றிய போது, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு புகார்கள் சென்றன.

இதன்படி, வெங்கடேஸ்வரன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்தனர். நிர்வாக காரணங்களால், வெங்கடேஸ்வரனின் வீட்டில் ரெய்டு நடத்தி, விசாரணை நடத்த முடியாத நிலை இருந்தது.இந்நிலையில், அவர் மீதான வழக்கில் துரிதமாக விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்பு உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, டி.எஸ்.பி., கிருஷ்ணராஜ், இன்ஸ்பெக்டர் நரேந்திரன் தலைமையிலான போலீசார், வெங்கடேஸ்வரன் வீட்டில் நேற்று எட்டு மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தி ஆவணங்கள், நகை, பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

வெங்கடேஸ்வரன், அவரது மனைவி ரம்யா, 48 ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர்.சிக்கியது எப்படி?தலைமை ஆசிரி யர் வெங்டேஸ்வரன், அ.தி.மு.க., ஆட்சியின்போது, ஆதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜலட்சுமி மற்றும் உயர் அதிகாரிகளுடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டதாக புகார் உள்ளது.வெங்கடேஸ்வரனுக்கு வழங்கப்படும் மாத ஊதியம், கடன் பிடித்தம் உள்ளிட்ட விபரங்களை கடந்த பிப்., மாதம், லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிக்கையாக பெற்றனர். அப்போது வெங்கடேஸ்வரன், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது உறுதியானது. இதன் அடிப்படையில், நேற்று வெங்கடேஸ்வரன் வீட்டில் சோதனை நடந்து உள்ளது.


latest tamil news


மகன் குடும்பம் மீது குண்டுவீச்சு சொத்து தகராறில் தந்தை வெறி
பெரம்பலுார்-பெட்ரோல் குண்டு வீசி, மகனை குடும்பத்துடன் கொலை செய்ய முயன்ற தந்தையை, போலீசார் கைது செய்தனர்.

அரியலுார் மாவட்டம், புதுச்சாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் அபிபுல்லா, 45; மனைவி அமீனாபீவி, 40; மகள் ஹாசிநுாரா, 19, ஆகியோருடன், 'ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்' போட்ட வீட்டில் வசித்து வருகிறார். மோப்ப நாய்வெளிநாட்டில் வேலை பார்த்த அபிபுல்லா, சில மாதங்களுக்கு முன் ஊர் திரும்பினார். தற்போது ஜெயங்கொண்டத்தில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, அபிபுல்லா குடும்பத்தினருடன் வீட்டில் துாங்கினார்.

இரவு 11:00 மணிஅளவில் இவரது வீட்டின் முன் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அபிபுல்லா வெளியே வந்து பார்த்தபோது, பேப்பர் உள்ளிட்ட பொருட்கள் வெடித்து சிதறியும், பெட்ரோல் பாட்டில்கள் எரிந்தபடியும் இருந்துள்ளன. பெட்ரோல் பாட்டில்கள் மீது தண்ணீர் ஊற்றி அணைத்தார். வீட்டை சுற்றி பார்த்தபோது, சமையல் அறையின் வெளிப்புறம், பின்பக்க வாசல் பகுதி உள்ளிட்ட இடங்களில், மேலும் மூன்று பெட்ரோல் நிரப்பிய பாட்டில்கள், பழைய பேப்பர்கள் கிடந்தன.அதிர்ச்சி அடைந்த அபிபுல்லா, ஜெயங்கொண்டம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார், கைரேகை நிபுணர்கள், மோப்ப நாயுடன் வந்து விசாரித்தனர்.விசாரணைஇதில், அபிபுல்லாவின் தந்தை ஜெய்னுல் ஆதின், 75, சொத்து பிரித்து கொடுப்பது தொடர்பான தகராறில், மகனை குடும்பத்துடன் கொலை செய்யும் நோக்கில், பெட்ரோல் குண்டுகளை வீசியது தெரிந்தது. அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


latest tamil news


மலைப்பாதையில் யானை வழிமறிப்பால் பரபரப்பு
பெ.நா.பாளையம்:வாகனத்தில் பயணித்தவர்களை, நள்ளிரவில் திம்பம் மலைப்பாதையில், யானைக் கூட்டம் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

துடியலுாரை சேர்ந்தவர் அசன் பாதுசா. இவர், தன் குடும்பத்துடன் டெம்போ டிராவலர் வாகனத்தில், மைசூர் சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு, 12:00 மணியளவில், திம்பம் மலைப்பாதை வழியாக வந்து கொண்டிருந்தார்.

வண்டி, 22வது கொண்டை ஊசி வளைவில் வரும்போது, திடீரென யானை கூட்டம் வழி மறித்தது. யானைகளை கண்டதும், வாகனத்தை அங்கேயே நிறுத்தி, முகப்பு விளக்கை அணைத்தனர்.ஆனால், யானைகள், வண்டியை நகர விடாமல் சுற்றி, சுற்றி வந்தன. இதில், ஆண் யானை ஒன்று, கண்ணாடியை துதிக்கையால் பிடித்து இழுத்து உடைத்தது. இதைக் கண்டு வண்டிக்குள் இருந்தவர்கள், அச்சமடைந்தனர்.

அப்போது, டெம்போ டிராவலர் பின்னால் இருந்த லாரி டிரைவர், லாரியின் 'ஹெட்லைட்டு'களை தொடர்ந்து ஆன், ஆப் செய்ததால், யானைக் கூட்டம் அங்கிருந்து நகர்ந்தது. இச்சம்பவத்தால், அந்த வாகனத்தில் இருந்தவர்கள், பதை பதைத்துப் போயினர்.


இந்திய நிகழ்வுகள்

ஏ.டி.எம்., மையத்தில் கொள்ளை
தானே: மஹாராஷ்டிராவில் தானே மாவட்டம் மஹரால் கிராமத்தில் தனியார் வங்கியின் ஏ.டி.எம்., மையத்திற்குள் நேற்று முன்தினம் இரவு மூன்று மர்ம நபர்கள் நுழைந்தனர். அவர்களில் இருவர் கொரோனா கவச உடையும், மற்றொருவர் 'செக்யூரிட்டி' சீருடையும் அணிந்திருந்தனர். பின் ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, 1 லட்சம் ரூபாய் திருடிய அவர்கள் கண்காணிப்பு கேமராக்களை எரித்துவிட்டு தப்பினர். அவர்களை போலீசார் தேடுகின்றனர்

20 நாய்கள் கொலை

மஹோபா: உத்தர பிரதேசம் மஹோபாவின் ஸ்ரீநகர் பகுதியில் உள்ள கிராமத்தில் கடந்த இரு நாட்களில் மர்ம நபர்கள் 20 நாய்களுக்கு விஷம் கலந்த பிஸ்கட் கொடுதது கொலை செய்துள்ளனர். நாய்களை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர்

முன்னாள் கவர்னர் மீது வழக்கு

லக்னோ: உத்தர பிரதேசத்தின் லக்னோவை சேர்ந்தவர் அஜீஸ் குரேஷி, 81. காங்., தலைவரான இவர், மிசோரம் மாநிலத்தின் முன்னாள் கவர்னர். இரு சமுதாயங்களுக்கு இடையே பதற்றம் உருவாக்கும் வகையில், மாநில அரசுக்கு எதிராக அவதுாறு அறிக்கைகள் வெளியிட்டதாக அஜீஸ் குரேஷி மீது போலீசார் தேசதுரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கிணற்றில் விழுந்த சிறுத்தை மீட்பு

நாசிக்-மஹாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம் கன்கோரி கிராமத்தில் உள்ள ஒரு விவசாயி நேற்று முன்தினம் அதிகாலையில் தன் விவசாய நிலத்துக்கு சென்றார். அங்குள்ள கிணற்றில் இருந்து சிறுத்தை உறுமும் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நீண்ட போராட்டத்துக்குப் பின் அந்த சிறுத்தை மீட்கப்பட்டது. அப்போது அந்தக் கிணற்றில் ஒரு பூனையும் இருப்பது தெரியவந்தது. அதுவும் பத்திரமாக மீட்கப்பட்டது.'பூனையை துரத்தி சென்றபோது, அதனுடன் சேர்ந்து சிறுத்தையும் கிணற்றில் விழுந்திருக்கும். ஆனால், 24 மணி நேரம் கிணற்றுக்குள் இருந்தபோதும் பூனையை அந்த சிறுத்தை எதுவும் செய்யவில்லை' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.


உலக நிகழ்வுகள்

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி
போர்ட் லாடர்லேல்-அமெரிக்காவில் மனநலம் பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. துப்பாக்கி கலாசாரத்திற்கு முடிவுகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அதில் பலன் அளிக்கவில்லை.

புளோரிடா மாகாணத்தின் போர்ட் லாடர்டேல் பகுதியில் உள்ள இரண்டு வீடுகளுக்குள் பிரையன் ரைலி, 33, என்ற மனநலம் பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், நேற்று அதிகாலை நுழைந்தார். கையில் துப்பாக்கியுடன் சென்ற அவர், உள்ளே இருந்த, 11 வயதான சிறுமியை ஏழு முறை சுட்டார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் அருகிலுள்ள வீடுகளுக்குள் நுழைந்த ரைலி, மூன்று மாத கைக்குழுந்தையுடன் இருந்த பெண்ணையும், குழந்தையின் பாட்டியையும் சுட்டுக்கொன்றார். இதையடுத்து, 62 வயதான முதியவர் ஒருவரும், அவரது கொலை வெறிக்கு பலியானார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தாக்குதல் நடத்திய ரைலியை கைது செய்தனர்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X