உணவு வகை கண்காட்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உணவு வகை கண்காட்சி

Added : செப் 07, 2021
Share
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் போஷன் அபியான் திட்டத்தில் தேசிய ஊட்டச் சத்து மாத விழா நிகழ்ச்சி நேற்று துவங்கியது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊட்டச்சத்து உணவு கண்காட்சியை கலெக்டர் வினீத் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில் சத்தான உணவு, சரிவிகித ஊட்டசத்து உணவு என்ற வகையில் இணை உணவு மாவு மூலம் தயாரித்த 50 உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
 உணவு வகை கண்காட்சி

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் போஷன் அபியான் திட்டத்தில் தேசிய ஊட்டச் சத்து மாத விழா நிகழ்ச்சி நேற்று துவங்கியது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊட்டச்சத்து உணவு கண்காட்சியை கலெக்டர் வினீத் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில் சத்தான உணவு, சரிவிகித ஊட்டசத்து உணவு என்ற வகையில் இணை உணவு மாவு மூலம் தயாரித்த 50 உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டன. பொதுமக்கள் பலர் பார்வையிட்டனர். இதில், திட்ட இயக்குனர் லட்சுமணன், திட்ட அலுவலர் மரகதம், ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X