பொது செய்தி

இந்தியா

நிலவை 9,000 முறை சுற்றிய 'சந்திரயான் - 2'

Updated : செப் 07, 2021 | Added : செப் 07, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
பெங்களூரு-இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அனுப்பிய 'சந்திரயான் - 2' செயற்கைக் கோள், நிலவின் சுற்று வட்டப் பாதையை 9,000 முறைக்கு மேல் சுற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலவு குறித்து ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் - 2 செயற்கைக் கோள், இரு ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. இதையொட்டி, பெங்களுரில் இஸ்ரோவின் இரு நாள் பயிலரங்கம் நேற்று

பெங்களூரு-இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அனுப்பிய 'சந்திரயான் - 2' செயற்கைக் கோள், நிலவின் சுற்று வட்டப் பாதையை 9,000 முறைக்கு மேல் சுற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news


நிலவு குறித்து ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் - 2 செயற்கைக் கோள், இரு ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. இதையொட்டி, பெங்களுரில் இஸ்ரோவின் இரு நாள் பயிலரங்கம் நேற்று துவங்கியது.


latest tamil news


இதில் இஸ்ரோ தலைவர் கே.சிவன் பேசியதாவது:இரு ஆண்டுகளில் சந்திரயான் - 2 செயற்கைக் கோள் நிலவின் சுற்றுவட்டப் பாதையை 9,000 முறைக்கு மேல் சுற்றி வந்துள்ளது. இதில், எட்டு வித ஆய்வுகளுக்கு பொருத்தப்பட்டுள்ள சாதனங்கள் நன்கு இயங்கி வருகின்றன.நிலவில் நீர், கனிமம் உள்ளிட்டவை தொடர்பான முக்கிய தகவல்களை சந்திரயான் - 2 செயற்கைக் கோள் அனுப்பியுள்ளது. அவை பிரமிக்க வைப்பதாக உள்ளன.இந்த அறிவியல் தகவல்கள் இஸ்ரோ வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், கல்வி மையங்கள் ஆய்வு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
07-செப்-202117:27:38 IST Report Abuse
THINAKAREN KARAMANI 'சந்திரயான் நிலவின் சுற்று வட்டப் பாதையை 9,000 முறைக்கு மேல் சுற்றி வந்துள்ளது,சரி. 9,000 முறை சுற்றிவந்து என்ன உபயோகம்? இன்னைன்ன கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தியுள்ளது என்று ஏதாவது சொன்னால் நல்லது. THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
07-செப்-202111:09:30 IST Report Abuse
அப்புசாமி கீழெ விழுந்த சந்திரயானை கண்டு பிடிச்சுட்டீங்களா?
Rate this:
Cancel
Elango - Sivagangai,இந்தியா
07-செப்-202107:15:47 IST Report Abuse
Elango சுற்றி சுற்றி என்ன பயன் பல கோடி பணத்தை விழுங்கி கொண்டு இருக்கிறது.... இதனால் எதாவது பயன் இந்தியா அடைந்துள்ளதாக தெரியவில்லை....இதை விட்டு விட்டு வேரு எதாவது திட்டங்களில் பணத்தை செலவிடலாம்....
Rate this:
Nsnatarajan Iyer - Bangalore,இந்தியா
07-செப்-202109:39:05 IST Report Abuse
Nsnatarajan Iyerஆமாம். இந்த தண்ட சிலவுக்கு பதில் கலைஞர் சமாதி கட்ட இன்னும் அம்பது கோடி வரிப் பணத்த செலவழித்தா தமிழன் பெருமை நாலு பக்கமும் பரவும் இல்லா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X