இது உங்கள் இடம்: வேலையை ஆரம்பிக்கலாம்!

Updated : செப் 07, 2021 | Added : செப் 07, 2021 | கருத்துகள் (50)
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:எஸ்.கணேஷ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:திருச்சியில் 100 கோடி ரூபாய் செலவில் 135 அடியில், ஈ.வெ.ரா.,வுக்கு சிலை அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்க உள்ளதாம்.'செய்வன திருந்த செய்' என்று ஒரு பொன்மொழி உண்டு. அதை தி.மு.க.,விற்கு நினைவுப்படுத்துகிறோம்.சமஸ்தானங்களை இணைத்து இந்தியாவை
இது, உங்கள், இடம், பெரியார், சிலை


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:எஸ்.கணேஷ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

திருச்சியில் 100 கோடி ரூபாய் செலவில் 135 அடியில், ஈ.வெ.ரா.,வுக்கு சிலை அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்க உள்ளதாம்.'செய்வன திருந்த செய்' என்று ஒரு பொன்மொழி உண்டு. அதை தி.மு.க.,விற்கு நினைவுப்படுத்துகிறோம்.சமஸ்தானங்களை இணைத்து இந்தியாவை கட்டமைத்த சர்தார் வல்லபபாய் படேலுக்கு, 2018ல், குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதா ஆற்றங்கரையில், 600 அடி உயர சிலை அமைக்கப்பட்டது.

தமிழகத்தில் இன்றைக்கு தி.மு.க., ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது என்றால், அதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது ஈ.வெ.ரா., தான்; அதில் எந்த சந்தேகமும் இல்லை.அப்படிப்பட்டவருக்கு நிறுவப்படும் சிலையானது சரித்திரம் படைக்க வேண்டும் அல்லவா...எனவே, 100 அடி உயர சிலை எல்லாம் வேலைக்காகாது; நாட்டில் இது போன்றதொரு சிலை இதுவரை வேறு எங்கும் அமைந்ததில்லை என வியக்கும் அளவுக்கு உயரமானதாக இருக்க வேண்டும்.சர்தார் வல்லபபாய் படேலை விட, ஈ.வெ.ரா., எந்த விதத்தில் குறைந்தவர்? நாட்டின், 'சுதந்திரத்திற்காக' அரும்பாடுப்பட்டவர் அல்லவா அவர்?படேலுக்கே 600 அடி உயரத்தில் சிலை இருக்கும் போது, ஈ.வெ.ரா.,வுக்கு குறைந்தபட்சம் 1,000 அடி உயரத்திலாவது உருவச்சிலை நிறுவ வேண்டாமா?


latest tamil news


ஒதுக்கீடு தொகையை 100 கோடி ரூபாய் என்பதை, 1,000 கோடி ரூபாயாக உயர்த்தி விட்டால், விஷயம் முடிந்தது; அவ்வளவு தானே?அட, 1,000 கோடி ரூபாய் எங்கே இருக்கிறது என கேட்காதீர்... தமிழக அரசிடமும் அவ்வளவு தொகை தேறாது. ஏற்கனவே, 6.10 லட்சம் கோடி ரூபாய் கடனில் உழன்று கொண்டுள்ளது.பணம் வசூலிப்பது மட்டுமே தி.மு.க.,வின் பணி. அங்கிருந்து ஒரு நயா பைசா கூட கிடைக்காது.

அப்படியென்றால், சிலை நிறுவ நிதி? உலக வங்கி என்ற ஒன்று எதற்காக உள்ளது?அங்கே சென்று கதவை தட்டி, முட்டி மோதி கடன் வாங்கி வர வேண்டும். 3,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, அதில் 2,000 கோடி ரூபாயை ஆளுங்கட்சியினர் 'ஆட்டை'யை போடவும் இத்திட்டம் உதவும்.'மாடும் மேய்ச்சாச்சு; மச்சானுக்கு பொண்ணும் பார்த்தாச்சு' என்ற சொலவடை மாதிரி, ஈ.வெ.ரா.,வுக்கு சிலை வைத்தது போலும் ஆயிற்று; ஆளுங்கட்சியினரும், 'கமிஷன்' அடிச்சதும் போலும் ஆயிற்று. என்ன சரி தானே?

Advertisement
வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
07-செப்-202121:46:27 IST Report Abuse
Sathyanarayanan Subramanian சிலை நிறுவ ஆளும் கட்சி உலக வங்கியின் கடன் பெற்று அதில் கழக கண்மணிகள் பயனடைய வேண்டும். தலைவர் செய்வார் என்று நம்புகிறோம்
Rate this:
Cancel
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
07-செப்-202121:42:59 IST Report Abuse
Sathyanarayanan Subramanian பெரியார் சிலைக்கு பதில் வேலை வாய்ப்பு கிடைக்க வேலையில்லா இளைஞர்கள் வாழ்வு அளிக்கலாம் விடியல் ஆட்சி தருமா.....
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
07-செப்-202121:42:14 IST Report Abuse
Anantharaman Srinivasan ஸ்ரீரங்கம் கோயில் கோபுரத்தை விட பெரியார் சிலை உயரமாக இருக்க வேண்டும். பிளேனில் பறந்து சென்று பார்க்கும் வகையில் அமைக்கலாம். சுற்றி சுற்றுலாதளம் அமைத்தால் வசூலாகும் . வட்டம் மாவட்டத்துக்கு வரும்படி..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X