பொது செய்தி

தமிழ்நாடு

சுடுகாட்டு பாதை பிரச்னை: அமைதிக்குழுக் கூட்டம்

Added : செப் 07, 2021
Share
Advertisement
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே சுடுகாட்டு பாதை பிரச்னை குறித்து அமைதிக்குழுக் கூட்டம் நடந்தது.சங்கராபுரம் அடுத்த கள்ளிப்பட்டு கிராமத்தில் 2000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள், இறந்தவர்களின் உடல்களை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு தனியாக பாதை இல்லை. இதனால், பழைய பாலப்பட்டு கிராமத்தின்வழியாகஉடல்களை எடுத்துச் செல்வது

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே சுடுகாட்டு பாதை பிரச்னை குறித்து அமைதிக்குழுக் கூட்டம் நடந்தது.சங்கராபுரம் அடுத்த கள்ளிப்பட்டு கிராமத்தில் 2000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள், இறந்தவர்களின் உடல்களை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு தனியாக பாதை இல்லை. இதனால், பழைய பாலப்பட்டு கிராமத்தின்வழியாகஉடல்களை எடுத்துச் செல்வது வழக்கம்.கடந்த மாதம் கள்ளிப்பட்டில் இறந்த ஒருவரின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றபோதுபழைய பாலப்பட்டு கிராம மக்கள் ஆட்சேபணை தெரிவித்ததால், இரு கிராம மக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இது தொடர்பான அமைதிக்குழுக் கூட்டம் கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., (பொறுப்பு) சரவணன் தலைமையில் நடந்தது.தாசில்தார் பாண்டியன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷணன், சப் இன்ஸ்பெக்டர் திருமால், வருவாய் ஆய்வாளர் திருமலை, வி.ஏ.ஓ., பாரதி மற்றும் இரு கிராம மக்களும் பங்கேற்றனர்.கூட்டத்தில், இறந்தவர்களின் உடலை பழைய பாலப்பட்டு வழியாக சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும்போதுமேளம் அடிக்காமல் செல்வது. சாலையில் பூக்களை போடாமல் செல்வது என முடிவுசெய்யப்பட்டது.

இதற்கு பழைய பாலப்பட்டு கிராமத்தில் இருந்து கூட்டத்தில் பங்கேற்றவர்கள், இது குறித்து ஊருக்குச் சென்று முக்கிய பிரமுகர்களுடன் பேசி முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.இதனால், உடன்பாடு ஏற்படாததால் கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் ஆர்.டி.ஓ., ஒத்திவைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X