பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் முதல் கவுன்சிலர்கள் வரை அலட்சியம்

Added : செப் 07, 2021
Share
Advertisement
கும்மிடிப்பூண்டி : கொரோனா மூன்றாவது அலையை தடுக்க அரசு பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், கும்மிடிப்பூண்டி பகுதியில், மக்கள் முதல், கவுன்சிலர்கள் வரை, சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல், முக கவசம் அணியாமல் இருப்பது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.கொரோனா மூன்றாவது அலையை தடுக்க, தமிழக அரசு பல கட்டுபாடுகளை விதித்தும், மக்களுக்கு தடுப்பூசி

கும்மிடிப்பூண்டி : கொரோனா மூன்றாவது அலையை தடுக்க அரசு பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், கும்மிடிப்பூண்டி பகுதியில், மக்கள் முதல், கவுன்சிலர்கள் வரை, சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல், முக கவசம் அணியாமல் இருப்பது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா மூன்றாவது அலையை தடுக்க, தமிழக அரசு பல கட்டுபாடுகளை விதித்தும், மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தியும் வருகிறது.இருப்பினும் பலர் தங்கள் அலட்சிய போக்கால், நோய் பரவ காரணமாக இருப்பதை காண முடிகிறது. முக கவசம், சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கும் நிலையில், கும்மிடிப்பூண்டி பகுதியில் மக்கள் முதல், கவுன்சிலர்கள் வரை, அதை அலட்சியப்படுத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.குறிப்பாக சில தினங்களுக்கு முன், கும்மிடிப்பூண்டி பி.டி.ஓ., அலுவலகத்தில், 'ஏசி' அறையில் நடந்த ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில், பெரும்பாலான கவுன்சிலர்கள் முக கவசம் அணியவில்லை.அதேபோல் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் முக கவசம் அணியாமல் கடைகளுக்கு வந்து செல்கின்றனர்.

இருசக்கர வாகனங்களில் செல்பவர்களில் பலர், முக கவசம் அணிவதில்லை.டிராக்டர், லாரி, சரக்கு வாகனங்கள் மூலம் வேலை மற்றும் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் மக்கள் சமூக இடைவெளி பின்பற்றாமல், முக கவசம் அணியாமல் செல்வதையும் காண முடிகிறது.கும்மிடிப்பூண்டி பகுதியில் சுகாதார துறையினர், போலீஸ், உள்ளாட்சி நிர்வாகத்தினர் முனைப்புடன் செயல்பட்டு அரசின் கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X