பொது செய்தி

தமிழ்நாடு

பல்லாங்குழியான ஒன்றிய சாலை

Added : செப் 07, 2021
Share
Advertisement
குமாரசேரி : குமாரசேரி ஊராட்சியில், பல்லாங்குழியான ஒன்றிய சாலையால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.கடம்பத்துார் ஒன்றியத்திற்குட்பட்டது குமாரசேரி ஊராட்சி. இந்த ஊராட்சி வழியே சென்னை உட்பட பல இடங்களிலிருந்து நரசிங்கபுரம் நரசிம்ம சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.இப்பகுதியில் உள்ள ஒன்றிய சாலை சேதமடைந்து பல்லாங்குழியாக மாறியுள்ளதால்,

குமாரசேரி : குமாரசேரி ஊராட்சியில், பல்லாங்குழியான ஒன்றிய சாலையால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.கடம்பத்துார் ஒன்றியத்திற்குட்பட்டது குமாரசேரி ஊராட்சி. இந்த ஊராட்சி வழியே சென்னை உட்பட பல இடங்களிலிருந்து நரசிங்கபுரம் நரசிம்ம சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.இப்பகுதியில் உள்ள ஒன்றிய சாலை சேதமடைந்து பல்லாங்குழியாக மாறியுள்ளதால், வாகனங்களில் வருவோர் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் விழுந்து விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது.இதேபோல், இந்த சாலையில் பல இடங்களில் சாலை சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.எனவே ஒன்றிய நிர்வாகத்தினர், பல்லாங்குழியாகமாறியுள்ள ஒன்றிய சாலையை சீரமைக்க வேண்டும்என, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ''குமாரசேரி ஊராட்சியில் ஆய்வு செய்து, சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X