பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியலில் குளறுபடி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

Added : செப் 07, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : எடுத்தவாய்நத்தம் ஊராட்சியில் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்கி திருத்தம் செய்யகோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.கள்ளக்குறிச்சி அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராம மக்கள், வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்

கள்ளக்குறிச்சி : எடுத்தவாய்நத்தம் ஊராட்சியில் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்கி திருத்தம் செய்யகோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராம மக்கள், வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனு:எடுத்தவாய்நத்தம் கிராம ஊராட்சி வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர் நீக்கப்படாமலும், ஒரே பெயர் இரண்டு இடங்களிலும் வருகிறது.மேலும், ஒரு வார்டில் வசிப்பவர்கள் பெயரை தொடர்பில்லாமல் அடுத்த வார்டில் சேர்க்கப்பட்டுள்ளது.இதனால், இறந்தவர்கள் பெயரில் கள்ள ஓட்டு போடவும், சில நபர்களின் வாக்குரிமையை ரத்து செய்யவும், அலைக்கழிப்பு ஏற்படும் வகையில் சிலரது பெயர்கள் வேறு வார்டிற்கு மாற்றப்பட்டுள்ளது.எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் முறையாக விசாரணை செய்து எடுத்தவாய்நத்தம் கிராம ஊராட்சி வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்து வெளியிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X