நல்லாசிரியர் விருது வழங்கும் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நல்லாசிரியர் விருது வழங்கும் விழா

Added : செப் 07, 2021
Share
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 ஆசிரியர்களுக்கு, நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், சங்கராபுரம் சீனுவாசன், சின்னமணியந்தல் ேஷக் ஜாகீர்உசேன், பாலியைச் சேர்ந்த ஜெயந்தி, விருகாவூர் பாரதி, கள்ளக்குறிச்சி ஜோதிலிங்கம், திருநாவலுார் ராஜசேகரன், தெங்கியாநத்தம் விஸ்வநாதன், வடதொரசலுார் அனந்தகண்ணன், பரிகம் அமுதன் ஆகிய 9 பேர்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 ஆசிரியர்களுக்கு, நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், சங்கராபுரம் சீனுவாசன், சின்னமணியந்தல் ேஷக் ஜாகீர்உசேன், பாலியைச் சேர்ந்த ஜெயந்தி, விருகாவூர் பாரதி, கள்ளக்குறிச்சி ஜோதிலிங்கம், திருநாவலுார் ராஜசேகரன், தெங்கியாநத்தம் விஸ்வநாதன், வடதொரசலுார் அனந்தகண்ணன், பரிகம் அமுதன் ஆகிய 9 பேர் இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, ஆசிரியர் தின விழாவையொட்டி, கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த விழாவில், விருது வழங்கப்பட்டது.விழாவிற்கு, கலெக்டர் ஸ்ரீதர், ரவிக்குமார் எம்.பி., ஆகியோர் தலைமை தாங்கி ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தனர்.விழாவில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி வரவேற்றார்.

கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட கல்வி அலுவலர்கள் கார்த்திகா, மணிமொழி, ஆரோக்கியசாமி, பள்ளி துணை ஆய்வாளர்கள் செந்தில், பிரபாகரன், சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், கலெக்டர் பேசுகையில், 'ஆன்லைன் வழிக் கல்வியில் ஏற்படும் சிக்கல்களைக் களைந்திடவும், தொற்று காலத்தில் மாணவர்களின் இடைநிற்றலை கண்டறிந்து சரி செய்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.ரவிக்குமார் எம்.பி., பேசுகையில், இம்மாவட்டம் கல்வியில் பின்தங்கிய மாவட்டம் ஆகும். இப்பகுதியில் கல்விப்பணியை திறம்பட செய்து நல்லாசிரியர் விருது பெறுவது கடினமான ஒன்று.விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை களைந்திட அரசுக்கு வலியுறுத்துவேன்' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X