'கோவிஷீல்டு' 2வது 'டோஸ்': உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

Updated : செப் 07, 2021 | Added : செப் 07, 2021
Share
Advertisement
கொச்சி-'தேவைப்படும் மக்களுக்கு 'கோவிஷீல்டு' தடுப்பூசியின் இரண்டாவது டோஸை நான்கு வாரங்களுக்குப் பின் செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்' என, கேரள உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.நம் நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசி, இரண்டு டோஸ்களாக செலுத்தப் பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியின் இரண்டாவது டோஸ், 84 நாட்கள் இடைவெளி விட்டு
கோவிஷீல்டு, கேரள உயர்நீதிமன்றம்,

கொச்சி-'தேவைப்படும் மக்களுக்கு 'கோவிஷீல்டு' தடுப்பூசியின் இரண்டாவது டோஸை நான்கு வாரங்களுக்குப் பின் செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்' என, கேரள உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

நம் நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசி, இரண்டு டோஸ்களாக செலுத்தப் பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியின் இரண்டாவது டோஸ், 84 நாட்கள் இடைவெளி விட்டு போடப்படுகிறது.

இந்நிலையில் கேரள உயர் நீதிமன்றத்தில், 'கிடெக்ஸ் கார்மன்ட்ஸ் லிமிடெட்' என்ற ஒரு தனியார் நிறுவனம், மனு ஒன்றை தாக்கல் செய்தது. கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி உள்ள தங்கள் தொழிலாளர்களுக்கு 84 நாட்கள் வரை காத்திருக்காமல், விரைந்து இரண்டாவது டோஸை செலுத்த அனுமதி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.


latest tamil news


இந்த மனு, நீதிபதி சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு: வெளிநாடுகளுக்கு பயணிக்கும் மக்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ், 84 நாட்கள் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே போடப்படுகிறது. அப்படி இருக்கும்பட்சத்தில், இங்குள்ள மக்களுக்கும் அதே சலுகையை வழங்காதது ஏன்?கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திய மக்களுக்கு, தேவைப்பட்டால் இரண்டாவது டோஸை நான்கு வாரங்களுக்குப் பின் செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X