'டெல்டா' வைரசுக்கு இந்தியா காரணமா?

Updated : செப் 07, 2021 | Added : செப் 07, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி-'கொரோனா இரண்டாவது அலை பரவலை ஏற்படுத்தியுள்ள 'டெல்டா' வகை வைரசுக்கு இந்தியா காரணமா என்பது குறித்து விசாரிக்க, சர்வதேச நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்' எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.'அபினவ் பாரத் காங்கிரஸ்' என்ற அரசு சாரா அமைப்பின் தலைவர் பங்கஜ் பட்னிஸ், உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்

புதுடில்லி-'கொரோனா இரண்டாவது அலை பரவலை ஏற்படுத்தியுள்ள 'டெல்டா' வகை வைரசுக்கு இந்தியா காரணமா என்பது குறித்து விசாரிக்க, சர்வதேச நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்' எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.



latest tamil news



'அபினவ் பாரத் காங்கிரஸ்' என்ற அரசு சாரா அமைப்பின் தலைவர் பங்கஜ் பட்னிஸ், உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:தற்போது உலகின் பல நாடுகளில் பரவிவரும் டெல்டா வகை கொரோனா வைரஸ், மஹாராஷ்டிர மாநிலம் அமராவதியில் தான் முதலில் தென்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இது உறுதி செய்யப்படவில்லை. இந்த வகை வைரஸ் பரவலுக்கு இந்தியா காரணமா என்பது குறித்து ஆராயப்பட வேண்டும்.இதற்காக சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய சர்வதேச குழுவை அமைத்து விசாரிக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


இந்த மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், விக்ரம் நாத், ஹீமா கோஹ்லி அமர்வு உத்தரவிட்டதாவது: இது தொடர்பாக சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. மேலும் கொரோனா பரவலை தடுப்பதற்கான வழிமுறைகளையே நாம் தற்போது கவனிக்க வேண்டும். வைரஸ் தோன்றியதில் சதி ஏதும் உள்ளதா என்பது குறித்து கவனிக்க வேண்டியதில்லை.விசாரணை நடத்த சர்வதேச குழுவை அமைப்பது தொடர்பாக, மத்திய அரசை நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-செப்-202111:04:06 IST Report Abuse
அப்புசாமி மத்திய அரசை நேரா தொடர்பு கொள்வதா? உச்ச நீதின்றம் உத்தரவிட்டாலே அவிங்க மதிப்பதில்லைன்னு தலைமை நீதிபதி வேதனை... இதுல நேரா தொடர்பு கொள்ளணுமா?
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
07-செப்-202110:56:43 IST Report Abuse
மதுரை விருமாண்டி உக்கிரபிரதேசவைரஸ், கும்பமேளாவைரஸ், யோகிவைரஸ், மோடிவைரஸ் ன்னுகூட கூப்பிடலாம். 🔥
Rate this:
Balaji - Chennai,இந்தியா
07-செப்-202111:40:01 IST Report Abuse
Balajiவந்தது மொதல்ல மஹாராஷ்டிரா லேன்னு செய்திலேயே சொல்லிஇருக்கு.. டாஸ்மாக் தம்லருக்கு இது விளங்க மாட்டேனுது.. வக்கிரத்தை கொட்டுறது பொது வெளியிலே.....
Rate this:
07-செப்-202120:32:58 IST Report Abuse
Vittal anand rao.ஏன் இங்கு ...வைரஸ் எண்டறு கூட சொல்லலாம்....
Rate this:
Cancel
Hari - chennai,சவுதி அரேபியா
07-செப்-202110:33:33 IST Report Abuse
Hari சீனாவின் கைக்கூலிகள் உலாத்தும் நாடு இந்தியா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X