பொது செய்தி

தமிழ்நாடு

முடிச்சூர் -- மணிமங்கலம் சாலை

Added : செப் 07, 2021
Share
Advertisement
தாம்பரம் : முடிச்சூர் -- மணிமங்கலம் இணைப்பு சாலை சீரமைப்பு பணிகள், 'ஆமை' வேகத்தில் நடந்து வருவது, வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை, சுங்குவார்சத்திரம், மாம்பாக்கம் பகுதிகளில் நுாற்றுக்கணக்கான தொழிற்சாலைகளும், பல்வேறு கல்வி நிறுவனங்களும் உள்ளன.சென்னை புறநகரில் இருந்து இப்பகுதிகளுக்கு செல்வோர், முடிச்சூர் --

தாம்பரம் : முடிச்சூர் -- மணிமங்கலம் இணைப்பு சாலை சீரமைப்பு பணிகள், 'ஆமை' வேகத்தில் நடந்து வருவது, வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை, சுங்குவார்சத்திரம், மாம்பாக்கம் பகுதிகளில் நுாற்றுக்கணக்கான தொழிற்சாலைகளும், பல்வேறு கல்வி நிறுவனங்களும் உள்ளன.சென்னை புறநகரில் இருந்து இப்பகுதிகளுக்கு செல்வோர், முடிச்சூர் -- மணிமங்கலம் இணைப்பு சாலையை பயன்படுத்தி பயணிக்கின்றனர்.

ஆனால், வாகன போக்குவரத்திற்கு ஏற்ப, இச்சாலை விரிவாக்கம் செய்யப்படாததுடன் முறையாக பராமரிக்கப்படவில்லை. இங்கு பெயரளவில் நடக்கும் சீரமைப்பு பணிகளும், ஆமை வேகத்தில் நடப்பதால், வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளதுடன், தினமும் சிரமத்தை சந்திக்கின்றனர். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது:மொத்தம், 16 கி.மீ., துாரமுள்ள சாலையின் இறுதி பகுதியில், 3.5 கி.மீ., துாரத்திற்கு, ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 15 கோடி ரூபாய் மதிப்பில், 2019ல் நான்கு வழிச்சாலை பணி முடிந்துள்ளது.முடிச்சூர் சந்திப்பு துவங்கி, மணிமங்கலம் சந்திப்பு வரையிலான, 4 கி.மீ., துார பகுதியில், 1.20 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளில், ஆங்காங்கே ஒட்டுப்போடும் பணிகளும், புதிதாக சாலை அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

மீதமுள்ள, 8.5 கி.மீ., துார பணிகளுக்கு, இன்னும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படவில்லை. திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள், முடிந்த பின்பே முழுமையாக சாலை சீரமைக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து, முடிச்சூர் குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பினர் கூறியதாவது:கடந்த, 2019ம் ஆண்டுக்கு பின், இச்சாலை சீரமைக்கப்படாததுடன், தேவைக்கேற்ப விரிவாக்கமும் செய்யப்படவில்லை.

போதிய அளவில், மின்விளக்குகளும் இல்லாததால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் நடக்கின்றன.இரண்டு ஆண்டுகளாக, இழுபறியில் நீடித்த, முடிச்சூர் சந்திப்பு துவங்கி, மணிமங்கலம் சந்திப்பு வரையிலான, சாலை சீரமைப்பு பணிகளே, தற்போது தான் துவங்கி உள்ளன. அவையும், மந்த கதியில் படு மோசமாக நடந்து வருகின்றன.அதே நேரம், மீதமுள்ள, 8.5 கி.மீ., துார பணிகளுக்கான, விரிவான திட்ட அறிக்கை, தயாரிக்கும் பணிகள், இன்று வரை, முழுமை பெறவில்லை என, நெடுஞ்சாலைத் துறை தரப்பில் கூறப்படுகிறது. அரசு தலையிட்டு, இச்சாலை சீரமைப்பில் கவனம் செலுத்தினால் தான், விபத்துகளை தடுக்க முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X