நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறிதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறிதல்

Added : செப் 07, 2021
Share
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் சார்பில், கடலுார் மாவட்டத்தில் சிறப்பு காசநோய் கண்டுபிடிப்பு முகாம் 2 மாதம் நடத்தப்படுகிறது. இதில், நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியப்பட உள்ளது. மாவட்டத்தில் நடுவீரப்பட்டு, ஒரையூர், மருங்கூர், வடலூர்,
 நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறிதல்

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் சார்பில், கடலுார் மாவட்டத்தில் சிறப்பு காசநோய் கண்டுபிடிப்பு முகாம் 2 மாதம் நடத்தப்படுகிறது.

இதில், நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியப்பட உள்ளது. மாவட்டத்தில் நடுவீரப்பட்டு, ஒரையூர், மருங்கூர், வடலூர், மங்களம்பேட்டை, நல்லூர், மங்களூர், கம்மாபுரம், ஒரத்துார், ஆயக்குடி, சிவக்கம், கிருஷ்ணாபுரம், புதுச்சத்திரம் வட்டார மருத்துவமனைகளில் வரும் 30ம் தேதி வரை எக்ஸ்ரே வசதியுடன் நடமாடும் வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் முகாம் நடத்தப்படுகிறது.

அதையொட்டி, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தை கலெக்டர் பாலசுப்ரமணியம் துவக்கி வைத்தார். பின் அவர் கூறுகையில், 2 வாரங்களுக்கு மேல் இருமல், மாலை நேர காய்ச்சல், பசியின்மை, எடைக்குறைவு போன்ற அறிகுறிகள் இருந்தால் சளி பரிசோதனை, எக்ஸ்ரே பரிசோதனை செய்ய வேண்டும். காசநோய்க்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மாத்திரை வழங்கப்படும். சிகிச்சை காலம் முடியும் வரை 6 மாதத்திற்கு உதவித் தொகை ரூ.500 வழங்கப்படும் என, தெரிவித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் சாய்லீலா, காசநோய் பிரிவு துணை இயக்குனர் கருணாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X