தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களிடம் ஆர்வம் குறைந்தது  இதுவரையில் 40 சதவீதம் மட்டுமே தொட்டுள்ளது

Added : செப் 07, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட ஆரம்பத்தில் இருந்த ஆர்வம் பொதுமக்களுக்கிடையே குறைந்துள்ளதால், நேற்று வரையில் சுமார் 40 சதவீதம் பேருக்கு மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் இரண்டாவது அலை தீவிரமானதால், தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அச்சம் காரணமாக பொது மக்கள் போட்டியிட்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். கடலுார் மாவட்டத்தில்
தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களிடம் ஆர்வம் குறைந்தது    இதுவரையில் 40 சதவீதம் மட்டுமே தொட்டுள்ளது

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட ஆரம்பத்தில் இருந்த ஆர்வம் பொதுமக்களுக்கிடையே குறைந்துள்ளதால், நேற்று வரையில் சுமார் 40 சதவீதம் பேருக்கு மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இரண்டாவது அலை தீவிரமானதால், தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அச்சம் காரணமாக பொது மக்கள் போட்டியிட்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். கடலுார் மாவட்டத்தில் தினசரி தொற்று பாதிப்பு ஆயிரத்தை தொட்டதால், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் போட்டியிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்தும், வாக்குவாதத்தில் ஈடுபட்டும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

கடந்த மாதம் தினசரி 17 ஆயிரம் பேர் வரையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கொரோனா தொற்று முற்றிலும் நீங்காமல், 3வது அலை மிரட்டும் சூழலில், மக்களிடம் தடுப்பூசி போடும் ஆர்வம் குறைந்துள்ளது.மாவட்டம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி மையம் அமைத்தும் தினசரி 2,000 மற்றும் 3,000 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தும் நிலை உள்ளது.40 சதவீதம்கடலுார் மாவட்டத்தில் சுமார் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலையில், நேற்று வரை 9 லட்சத்து 23 ஆயிரத்து 736 பேர் மட்டுமே செலுத்திக் கொண்டுள்ளனர்.

இதில், ஆண்கள் 4 லட்சத்து 56 ஆயிரத்து 637 பேரும், பெண்கள் 4 லட்சத்து 66 ஆயிரத்து 971 பேரும் அடங்குவர். மேலும், முதல் டோஸ் 7 லட்சத்து 64 ஆயிரத்து 205 பேரும், இரண்டாவது டோஸ் 1 லட்சத்து 59 ஆயிரத்து 531 பேர் மட்டுமே போட்டுள்ளனர்.18 முதல் 44 வயது வரை 4 லட்சத்து 95 ஆயிரத்து 752 பேரும், 45 முதல் 60 வயது வரை 2 லட்சத்து 85 ஆயிரத்து 152 பேரும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 1 லட்சத்து 42 ஆயிரத்து 832 பேரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

மொத்ததில் இது வரை சுமார் 40 சதவீதம் பேர் மட்டுமே போட்டுள்ளனர்.ஆர்வமில்லைகடந்த மாதம் வரை, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மக்கள் படையெடுத்தனர். அப்போது அனைவருக்கும் செலுத்த முடியாத நிலையில், தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது தாராளமாக தடுப்பூசி வந்துள்ளது. மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊசிகள் நேற்று வரை இருப்பு உள்ளது. ஆனால், போட்டுக் கொள்ளத்தான் பொதுமக்கள் வருவதில்லை என்கின்றனர் சுகாதாரத்துறையினர்.


அலட்சியம்

உலக அளவில் கொரோனா தொற்றை எதிர்கொள்ள தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் 2 டோஸ்கள் செலுத்தப்படும் நிலையில், கொரோனா வைரஸ் உருமாறி தாக்குவதால், 3 வதாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆலோசிக்கின்றனர். சில நாடுகளில் பூஸ்டர் டோசும் போடப்பட்டு வருகிறது. ஆனால், கடலுார் மாவட்டத்தில் சிறிதும் கவலையின்றி தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டுவதில்லை. அத்துடன் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளும் முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை. இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல், அனைவரும் முறையாக தடுப்பூசி செலுத்த மாவட்ட நிர்வாகம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X