பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் குளத்தில் கழிவுநீரை கலக்காதீர்

Added : செப் 07, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் வண்டிப்பாளையம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் குளம் துார்வாரும் பணியை அய்யப்பன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.கடலுார் வண்டிப்பாளையம் சுப்ரமணிய சுவாமி கோவில் குளம் பல ஆண்டுகளாக துார்வாராமல் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசியது. பக்தர்கள் கோரிக்கையேற்று அய்யப்பன் எம்.எல்.ஏ., கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். வெளி மாவட்ட சிவனடியார்கள் நிதி

கடலுார் : கடலுார் வண்டிப்பாளையம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் குளம் துார்வாரும் பணியை அய்யப்பன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

கடலுார் வண்டிப்பாளையம் சுப்ரமணிய சுவாமி கோவில் குளம் பல ஆண்டுகளாக துார்வாராமல் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசியது. பக்தர்கள் கோரிக்கையேற்று அய்யப்பன் எம்.எல்.ஏ., கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். வெளி மாவட்ட சிவனடியார்கள் நிதி திரட்டி கோவில் குளத்தை துார் முடிவு செய்தனர்.குளம் துார் வாரும் பணியை அய்யப்பன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்து, குளத்தில் கழிவுநீரை கலக்கக் கூடாது என பொதுமக்களை கேட்டுக் கொண்டார். முன்னாள் சேர்மன் ராஜேந்திரன், நகர செயலாளர் ராஜா, நகர பொருளாளர் சலீம், டிப்பர் லாரி சங்கம் பிரகாஷ், அரிமா சங்கத் தலைவர்கள் தினகரன், ஆதி பெருமாள், சன் பிரைட் பிரகாஷ் மற்றும் தி.மு.க., வினர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X