பொது செய்தி

தமிழ்நாடு

'பஸ் டே' கொண்டாட திட்டம்

Added : செப் 07, 2021
Share
Advertisement
பூந்தமல்லி : பூந்தமல்லியில், 'பஸ் டே' கொண்டாட திட்டம் தீட்டிய கல்லுாரி மாணவர்களை, போலீசார் அடையாளம் கண்டு, அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட கல்லுாரிகள், ஊரடங்கு தளர்வை அடுத்து தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அதே போல், 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளில் வகுப்பு நடத்தப்படுகிறது. சோதனைஇந்நிலையில்,

பூந்தமல்லி : பூந்தமல்லியில், 'பஸ் டே' கொண்டாட திட்டம் தீட்டிய கல்லுாரி மாணவர்களை, போலீசார் அடையாளம் கண்டு, அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட கல்லுாரிகள், ஊரடங்கு தளர்வை அடுத்து தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அதே போல், 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளில் வகுப்பு நடத்தப்படுகிறது. சோதனைஇந்நிலையில், பூந்தமல்லியில் இருந்து சென்னைக்கு, பச்சையப்பன் கல்லுாரி வழியாக, அரசு பேருந்துகளில் செல்லும் மாணவர்கள், 'பஸ் டே' கொண்டாட இருப்பதாகவும், அவர்களுக்குள் 'ரூட் தல' பிரச்னை இருந்து வருவதாகவும், பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பூந்தமல்லி போலீசார், பேருந்து நிலையங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர். பூந்தமல்லி பேருந்து நிலையத்தில், நேற்று காலை, பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள், 'பஸ் டே' கொண்டாட கூட்டமாக நின்று பேசி கொண்டிருந்தனர்.போலீசார் அங்கு சென்ற போது, மாணவர்கள் அங்கிருந்து, மற்றொரு பேருந்து நிலையத்திற்கு சென்றனர். அங்கு சென்ற பூந்தமல்லி ஆய்வாளர் சிதம்பரம் முருகேசன், கல்லுாரி மாணவர்களை ஒன்றாக அமரவைத்து, அடையாள அட்டையை வாங்கி சோதனை நடத்தினார்.

பிரச்னைபின், ''பேருந்துகளில் 'பஸ் டே' கொண்டாடக்கூடாது; 'ரூட் தல' பிரச்னையிலும் ஈடுபடக்கூடாது. படிப்பதற்காக கல்லுாரிக்கு செல்கிறோம். படிக்கும் காலத்தில் போலீஸ் வழக்குகளில் சிக்கிக்கொண்டால், பிற்காலத்தில் வேலைக்கு செல்லும் போது பிரச்னைகள் ஏற்படும்,'' என அறிவுரை வழங்கினார். இதையடுத்து, மாணவர்களை ஒன்றாக பேருந்துகளில் அனுப்பாமல், மூன்று, மூன்று பேராக, பேருந்துகளில், போலீசார் ஏற்றி, கல்லுாரிக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X