பொது செய்தி

தமிழ்நாடு

நீர்தேக்க தொட்டி கட்ட முடிவு

Added : செப் 07, 2021
Share
Advertisement
தாம்பரம் : சிறுவர் பூங்காவிற்குள் பயன்பாடின்றி கிடக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில், கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட, தாம்பரம் நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட, 39வது வார்டு, மேற்கு ராஜகோபால் நகர் மூன்றாவது தெருவில், நகராட்சி கட்டுப்பாட்டில் சிறுவர் பூங்கா

தாம்பரம் : சிறுவர் பூங்காவிற்குள் பயன்பாடின்றி கிடக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில், கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட, தாம்பரம் நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட, 39வது வார்டு, மேற்கு ராஜகோபால் நகர் மூன்றாவது தெருவில், நகராட்சி கட்டுப்பாட்டில் சிறுவர் பூங்கா உள்ளது.பராமரிப்புஇப்பூங்காவினுள், 20 ஆண்டுகளுக்கு முன், ராஜகோபால் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள, 10க்கும் மேற்பட்ட தெருக்களின் குடிநீர் வினியோக வசதிக்காக, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.இதிலிருந்து, குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் எழுந்ததால், ஐந்து ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.பின், தொட்டி பயன்பாடின்றி கிடந்தது. நாளடைவில் பூங்காவும், பராமரிக்கப்படாததால் சமூக விரோதிகள் இதை பயன்படுத்தி வந்தனர்.

இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. தொடர்ந்து, 9 லட்சம் ரூபாய் செலவில், பூங்காவை பராமரிக்க, ஒப்பந்தம் விடப்பட்டு, சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.பயன்பாடுஅதேநேரம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, குடிநீர் வினியோகத்தை சீராக வழங்க, 9.90 லட்சம் ரூபாயில், 3 மீட்டர் விட்டத்தில், 10 ஆயிரம் லிட்டர் கொள்ள ளவுள்ள கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட உள்ளது.இத்தொட்டி கட்டப்பட்டால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதனால், ராஜகோபால் நகர், 3வது தெரு மற்றும் அதை சுற்றியுள்ள, தெருக்களுக்கு குடிநீர் தடையின்றி வழங்க முடியும் என அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X