பொது செய்தி

தமிழ்நாடு

ரேடியல் சாலை கால்வாய் பணி

Added : செப் 07, 2021
Share
Advertisement
கீழ்கட்டளை - -பள்ளிக்கரணை இடையே ரேடியல் சாலையில், 60 கோடி ரூபாய் மதிப்பிலான மழை நீர் வடிகால் அமைக்கும் பணி, மந்த கதியில் நடந்து வருகிறது.தொடர் மழைக்கு முன் பணிகளை முடித்து, தடையின்றி மழை நீர் செல்ல வழி செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்சென்னையில் உள்ள கீழ்கட்டளை, நாராயணபுரம் ஏரிகள் பல நுாறு ஏக்கர் பரப்பளவு கொண்டது. முன்பு, இரண்டு ஏரிகளும் சுற்று

கீழ்கட்டளை - -பள்ளிக்கரணை இடையே ரேடியல் சாலையில், 60 கோடி ரூபாய் மதிப்பிலான மழை நீர் வடிகால் அமைக்கும் பணி, மந்த கதியில் நடந்து வருகிறது.தொடர் மழைக்கு முன் பணிகளை முடித்து, தடையின்றி மழை நீர் செல்ல வழி செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்சென்னையில் உள்ள கீழ்கட்டளை, நாராயணபுரம் ஏரிகள் பல நுாறு ஏக்கர் பரப்பளவு கொண்டது.

முன்பு, இரண்டு ஏரிகளும் சுற்று வட்டாரப் பகுதிகளில், நடந்த விவசாயத்திற்கு நீர்பாசனமாக விளங்கின.அகற்றம்கடந்த, 40 ஆண்டுகளில் சென்னை புறநகர் வளர்ச்சி அடைந்ததால், விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறின. தற்போது, மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இரு ஏரிகளும் சுற்று வட்டாரப் பகுதி நிலத்தடி நீர் மட்டத்தை காத்து வருகின்றன.பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த இரு ஏரிகளிளும், 30 ஆண்டுகளில் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி சீரழந்து உள்ளது.

மேலும், இரு ஏரிகளையும் இரண்டாக பிரித்து ரேடியல் சாலை அமைக்கப்பட்டது.கீழ்கட்டளை ஏரியில் இருந்து நாராயணபுரம் ஏரிக்கு செல்லும் அகலமான போக்கு கால்வாயை கூட ஆக்கிரமிப்பாளர்கள் விட்டுவைக்கவில்லை.நம் நாளிதழ் தொடர்ந்து வெளியிட்ட செய்தியின் நடவடிக்கையாக, ஆக்கிரமிப்பு ஓரளவு அகற்றப்பட்டன. இருப்பினும், பருவமழையால் கீழ்கட்டளை ஏரி நிரம்பி, அதன் உபரி நீர் போக்கு கால்வாயில் தடையின்றி செல்ல முடியவில்லை.ஆண்டுதோறும் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, கீழ்கட்டளை ஏரியின் உபரி நீர், நாராயணபுரம் ஏரிக்கும், அங்கிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு சென்றடைய வேண்டும்.கோரிக்கைஅதற்கு, வசதியாக ரேடியல் சாலையின் இருபுறமும், பிரமாண்ட மழைநீர் வடிகால் அமைக்க நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது.

அதற்காக, 60 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டு, கடந்த ஆண்டு அப்பணிகள் துவக்கப்பட்டன.இந்த வடிகால் மேல் பகுதி,'கான்கிரீட்' மூலம் மூடப்பட்டு, அதன் மீது பொதுமக்கள் போக்குவரத்திற்கான, இணைப்புச் சாலை அமைக்கப்படுகிறது.கால்வாயை இயந்திரங்கள் கொண்டு சுத்தப்படுத்துவதற்கு வசதியாக, ஆங்காங்கே மூடியுடன் கூடிய வழித்தடம் அமைக்கப்படுகிறது.கடந்த ஆண்டு துவங்கப்பட்ட இப்பணிகள், 80 சதவீதம் முடிந்துள்ள நிலையில், தற்போது மந்த கதியில் நடந்து வருகிறது. ரேடியல் சாலை கோவிலம்பாக்கம் பகுதியில், இரண்டு மாதங்களாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.பருவ மழை துவங்குவதற்கு முன், வடிகால் பணிகளை துரித கதியில் முடிக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X