பொது செய்தி

தமிழ்நாடு

மாற்று இடம் கேட்டு எம்.எல்.ஏ., தலைமையில் பொதுமக்கள் மனு

Added : செப் 07, 2021
Share
Advertisement
சிதம்பரம் : சிதம்பரத்தில் குளக்கரையோரம் வசிக்கும் மக்கள் மாற்று இடம் கேட்டு பாண்டியன் எம்.எல்.ஏ., தலைமையில் சப் கலெக்டரிடம் மனு அளித்தனர். சிதம்பரம் தட்சன் குளத்தை சுற்றி நீர்நிலை ஆக்கிரமிப்பு பல ஆண்டுகளாக வசிக்கும் பொதுமக்கள் இடத்தை காலி செய்ய கோரி நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அப்பகுதி பொதுமக்கள் நேற்று பாண்டியன் எம்.எல்.ஏ., தலைமையில் சப்கலெக்டர்

சிதம்பரம் : சிதம்பரத்தில் குளக்கரையோரம் வசிக்கும் மக்கள் மாற்று இடம் கேட்டு பாண்டியன் எம்.எல்.ஏ., தலைமையில் சப் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

சிதம்பரம் தட்சன் குளத்தை சுற்றி நீர்நிலை ஆக்கிரமிப்பு பல ஆண்டுகளாக வசிக்கும் பொதுமக்கள் இடத்தை காலி செய்ய கோரி நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அப்பகுதி பொதுமக்கள் நேற்று பாண்டியன் எம்.எல்.ஏ., தலைமையில் சப்கலெக்டர் மதுபாலனை சந்தித்து மனு அளித்தனர்.

அதில் , நாங்கள் 30 ஆண்டுகளாக 100 குடும்பங்கள் இப்பகுதியில் வசித்து வருகிறோம். தற்போது போதிய கால அவகாசம் வழங்காமல் இடத்தை காலி செய்ய கோரி நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மிகவும் கஷ்டமான சூழலில் குடும்பத்தை நடத்தி வருகிறோம். எங்களின் பொருளாதார சூழல் கருதி எங்களுக்கு மாற்று இடம் வழங்கி விட்டு, இடத்தை காலி செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும், என கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X