திடீர் மின் வெட்டால் பொருட்கள் நாசம்

Added : செப் 07, 2021
Share
Advertisement
தாம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. குறிப்பாக, வேங்கைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட, விக்னராஜபுரம்.சந்தோஷபுரம், மேற்கு தாம்பரம், கடப்பேரி, கிழக்கு தாம்பரம், ஆனந்தபுரம், பழைய பெருங்களத்துார், குண்டுமேடு மற்றும் அதை சுற்றிய பகுதிகளில், குறைந்த மற்றும் அதிக மின்னழுத்த பிரச்னை ஏற்படுகிறது.இதனால், பல இடங்களில், வீட்டு உபயோக

தாம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. குறிப்பாக, வேங்கைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட, விக்னராஜபுரம்.சந்தோஷபுரம், மேற்கு தாம்பரம், கடப்பேரி, கிழக்கு தாம்பரம், ஆனந்தபுரம், பழைய பெருங்களத்துார், குண்டுமேடு மற்றும் அதை சுற்றிய பகுதிகளில், குறைந்த மற்றும் அதிக மின்னழுத்த பிரச்னை ஏற்படுகிறது.

இதனால், பல இடங்களில், வீட்டு உபயோக பொருட்கள் பழுதாகின்றன. மின்வாரிய அலுவலகத்தில் பல முறை புகார் அளித்தும் பலன் இல்லை. நிலைமை இப்படியே தொடர்ந்தால், மக்கள் வீதியில் இறங்கி போராடவும் தயாராக உள்ளனர். வேங்கைவாசல் உட்பட, பல இடங்களில், தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள், விதிகளை மீறி, தங்களின் இணையதள இணைப்பு பெட்டிகளை வைக்கின்றனர்.

இதனால், பொதுமக்களுக்கு பல வகையிலும் சிரமம் ஏற்படுகிறது. பொதுமக்களின் பொறுமையை சோதிக்காமல், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X