சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியுடன் மனக்கசப்பு புது மாப்பிள்ளை தற்கொலை

Added : செப் 07, 2021
Share
Advertisement
அனகாபுத்துார் : அனகாபுத்துாரில், திருமணமான நான்கு மாதத்தில், வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அனகாபுத்துார், பாலாஜி நகரைச் சேர்ந்தவர் ஜவகர், 28; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு, நான்கு மாதங்களுக்கு முன், அஞ்சலி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.கடந்த வாரம், புதுக்கோட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு, அஞ்சலி சென்றார். நேற்று முன்தினம் இரவு, மனைவியுடன், ஜவகர்

அனகாபுத்துார் : அனகாபுத்துாரில், திருமணமான நான்கு மாதத்தில், வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அனகாபுத்துார், பாலாஜி நகரைச் சேர்ந்தவர் ஜவகர், 28; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு, நான்கு மாதங்களுக்கு முன், அஞ்சலி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.கடந்த வாரம், புதுக்கோட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு, அஞ்சலி சென்றார். நேற்று முன்தினம் இரவு, மனைவியுடன், ஜவகர் 'வீடியோ காலில்' பேசினார்.

அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இந்நிலையில், நேற்று காலை, கணவரின் மொபைல் போனுக்கு, அஞ்சலி தொடர்பு கொண்டார். மொபைல் போன், 'சுவிட்ச்- ஆப்' செய்யப்பட்டிருந்தது. உறவினர் பிரபு என்பவர் பார்த்தபோது, வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.பின், கதவை உடைத்து பார்த்தபோது, ஜவகர் துாக்கில் தொங்கியது தெரிய வந்தது. இது குறித்து, போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X