பொது செய்தி

தமிழ்நாடு

பென்ஷன் பணம் கேட்டு நகராட்சி அலுவலகம் முன் தர்ணா

Added : செப் 07, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் நகராட்சி ஊழியரின் பென்ஷன் பணத்தை கேட்டு, குடும்பத்தினர் நகராட்சி அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் நகராட்சியில் கடந்த 1998 - 2008ம் ஆண்டில் இளநிலை உதவியாளராக அம்மாசி பணி புரிந்தார். இவரது மனைவி இருமலர். இவர்களுக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2008ல் உடல்நிலை சரியில்லாமல் அம்மாசி இறந்தார். அவரது மனைவிக்கு வாரிசு

விருத்தாசலம் : விருத்தாசலம் நகராட்சி ஊழியரின் பென்ஷன் பணத்தை கேட்டு, குடும்பத்தினர் நகராட்சி அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் நகராட்சியில் கடந்த 1998 - 2008ம் ஆண்டில் இளநிலை உதவியாளராக அம்மாசி பணி புரிந்தார்.

இவரது மனைவி இருமலர். இவர்களுக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2008ல் உடல்நிலை சரியில்லாமல் அம்மாசி இறந்தார். அவரது மனைவிக்கு வாரிசு அடிப்படையில் துப்புரவு பணியாளர் வேலை வழங்கப்பட்டது. அம்மாசி குடும்பத்திற்கு இது வரை பென்சன் வழங்கவில்லை.இது குறித்து, குடும்பத்தினர் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பயனில்லை. ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர், நேற்று மாலை 4:00 மணியளவில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விருத்தாசலம் போலீசார் வந்து, அதிகாரியிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பேரில் மாலை 4:30 மணிக்கு தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X