குடிநீரில் கழிவு நீர் கலப்பு கொரட்டூர் மக்கள் வேதனை

Added : செப் 07, 2021
Share
Advertisement
கொரட்டூர் : குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதால், பொதுமக்கள் சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கின்றனர்.சென்னை அம்பத்துார் மண்டலம், 83வது வார்டு கொரட்டூர் ரயில்வே சுரங்கப்பாதை அருகில் உள்ள, பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு, நியூ காலனி ஆகியவற்றில், 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இவற்றுக்கான குடிநீர் இணைப்புகளில் கடந்த மே மாதம் முதல், கழிவு நீர் கலந்து வருகிறது. காலையில்

கொரட்டூர் : குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதால், பொதுமக்கள் சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கின்றனர்.

சென்னை அம்பத்துார் மண்டலம், 83வது வார்டு கொரட்டூர் ரயில்வே சுரங்கப்பாதை அருகில் உள்ள, பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு, நியூ காலனி ஆகியவற்றில், 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இவற்றுக்கான குடிநீர் இணைப்புகளில் கடந்த மே மாதம் முதல், கழிவு நீர் கலந்து வருகிறது. காலையில் குடிநீர் வினியோகம் துவங்கியதும், முதல் 1 மணி நேரம் துர்நாற்றம் வீசுகிறது.அதன் பிறகு துர்நாற்றம் குறைந்தாலும், குடிநீரை பயன்படுத்த முடியவில்லை. அதனால், அத்தியாவசிய தேவைக்கு குடிநீரை பயன்படுத்த முடியவில்லை.

மேலும், குடிநீர் வினியோகம் துவங்கி, 1 மணி நேரத்திற்குப் பிறகு கிடைக்கும் தண்ணீரை, பிரச்னை ஏதும் இருக்காது என பயன்படுத்துவோர், உடல் நலம் பாதிக்கப்பட்டு சுகாதார சீர்கேட்டில் தவிக்கின்றனர். இந்த பிரச்னை குறித்து, அம்பத்துார் மண்டல சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகார் செய்து விட்டோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால், குடிநீர் வரிக்கான கட்டணம் தவறாமல் செலுத்தப்பட்டும், எங்களது பிரச்னைக்கு தீர்வு காண, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவில்லை என, பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X