பாதாள சாக்கடை அடைப்பு அகற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாதாள சாக்கடை அடைப்பு அகற்றம்

Added : செப் 07, 2021
Share
ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டையில், லபான் தெரு உள்ளது. இத்தெருவில் நான்கு நாட்களுக்கு முன் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, தெருவில் கழிவு நீர் தேங்கியது.இது குறித்து, வாரிய பொறியாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குடலை பிடுக்கும் துர்நாற்றத்தால், சரிவர சாப்பிட கூட முடியாமல் அப்பகுதிமக்கள் தவித்து வந்தனர்.இது குறித்து, நம்

ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டையில், லபான் தெரு உள்ளது. இத்தெருவில் நான்கு நாட்களுக்கு முன் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, தெருவில் கழிவு நீர் தேங்கியது.இது குறித்து, வாரிய பொறியாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குடலை பிடுக்கும் துர்நாற்றத்தால், சரிவர சாப்பிட கூட முடியாமல் அப்பகுதிமக்கள் தவித்து வந்தனர்.இது குறித்து, நம் நாளிதழ் புகார் பெட்டியில் நேற்று செய்தி வெளியானது.இதைத்தொடர்ந்து, பாதாள சாக்கடை அடைப்பு அகற்றப்பட்டதோடு, அப்பகுதி முழுதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X