பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டலில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை குளிர்பதன பெட்டிகளுக்கு 'சீல்'

Added : செப் 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி : அசைவ உணவுகளை முறையாக பராமரிக்காத இரு ஓட்டல்களில் குளிர்பதன பெட்டிகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரி கள் 'சீல்' வைத்தனர்.உணவு பாதுகாப்பு ஆணையர் அருண் உத்தர வின்பேரில், துணை ஆணை யர் இளந்திரையன் தலைமையிலான குழுவினர் நேற்று, நகரப்பகுதியில் உள்ள ஓட்டல்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அதில், வள்ளலார் சாலையில் உள்ள இரண்டு அசைவ ஓட்டலில் சமையலறை சுகாதாரம்

புதுச்சேரி : அசைவ உணவுகளை முறையாக பராமரிக்காத இரு ஓட்டல்களில் குளிர்பதன பெட்டிகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரி கள் 'சீல்' வைத்தனர்.உணவு பாதுகாப்பு ஆணையர் அருண் உத்தர வின்பேரில், துணை ஆணை யர் இளந்திரையன் தலைமையிலான குழுவினர் நேற்று, நகரப்பகுதியில் உள்ள ஓட்டல்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், வள்ளலார் சாலையில் உள்ள இரண்டு அசைவ ஓட்டலில் சமையலறை சுகாதாரம் இன்றியும், அசைவ உணவுகளை முறையாக குளிர்பதன பெட்டியில் வைத்து பராமரிக்காமல் இருப்பதையும் கண்டறிந்தனர்.அதையடுத்து, இரு கடைகளிலும் குளிர்பதன பெட்டிகளுக்கு சீல் வைத்தனர். அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.இ.சி.ஆரில் உள்ள நவீன மீன் அங்காடியில் நடந்த சோதனையில், குளிரூட்டும் வசதியில் குறைபாடு இருந்ததால் மீன் கெட்டுப் போகும் வாய்ப்பு உள்ளதை கண்டறிந்தனர்.இதுகுறித்து மீன்வளத் துறையிடம் ஆய்வு குழுவினர் புகார் அளிக்க உள்ளனர். அதே பகுதியில் உள்ள சைவ உணவகத்தில், சமையல் அறையில் குறைபாடு களை நிவர்த்தி செய்யுமாறு எச்சரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X