பொது செய்தி

தமிழ்நாடு

அய்யப்பன்தாங்கல் ஊராட்சி மாநகராட்சியுடன் இணைக்கப்படுமா?

Added : செப் 07, 2021
Share
Advertisement
அய்யப்பன்தாங்கல் : அய்யப்பன்தாங்கல் ஊராட்சியை, சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என, மக்கள் வலியுறித்தி வருகின்றனர்.சென்னை மாநகராட்சி எல்லையில் இருந்து, 1.5 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது, அய்யப்பன் தாங்கல் ஊராட்சி. இது காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட குன்றத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.இந்த ஊராட்சியை ஒட்டியே, புதிதாக வரவிருக்கும் சென்னை மெட்ரோ

அய்யப்பன்தாங்கல் : அய்யப்பன்தாங்கல் ஊராட்சியை, சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என, மக்கள் வலியுறித்தி வருகின்றனர்.சென்னை மாநகராட்சி எல்லையில் இருந்து, 1.5 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது, அய்யப்பன் தாங்கல் ஊராட்சி.

இது காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட குன்றத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.இந்த ஊராட்சியை ஒட்டியே, புதிதாக வரவிருக்கும் சென்னை மெட்ரோ ரயில் பாதை தடம் வருகிறது.பேருந்து பணிமனைஇதனால் வேகமாக வளர்ச்சி கண்டு வரும் அய்யப்பன்தாங்கலில், மருத்துவ கல்லுாரி, அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்டவை வருகின்றன.அதுமட்டுமல்லாமல், அய்யப்பன்தாங்கல் பணிமனையில் இருந்து, பிராட்வே, வடபழநி, கிண்டி, கோயம்பேடு உள்ளிட்ட இடங்களுக்கு, 150க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் போரூர் ஏரி, புறவழிச்சாலை இந்த ஊராட்சியை ஒட்டியே உள்ளன.ஆனாலும், அய்யப்பன் தாங்கல் ஊராட்சி மக்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக, 65 கி.மீ., தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 30 கி.மீ., தொலைவில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம், 25 கி.மீ., தொலைவில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.அய்யப்பன்தாங்கல் ஊராட்சிக்கு அருகே உள்ள போரூர், செட்டியார் அகரம் மற்றும் காரம்பாக்கம் ஊராட்சிகள், சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட நிலையில், அய்யப்பன்தாங்கல் மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் கீழ் உள்ளது.

இதனால், அய்யப்பன்தாங்கல் ஊராட்சியை, சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.மக்கள் கருத்துஇது குறித்து, பரணிபுத்துார் மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு சங்க நிர்வாகி, ஆர்.கே.ரவிச்சந்திரன் கூறியதாவது:கடந்த, 2007ல், உயர் நிலை குழு அமைக்கப்பட்டு, புறநகர் பகுதிகளை ஒருங்கிணைத்து, புதிய மாநகராட்சிகள் ஏற்படுத்துவது குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இதில், தாம்பரம், அம்பத்துார் அல்லது ஆவடியை தலைமையிடமாக, புதிய புறநகர் மாநகராட்சிகளை அமைக்க, முடிவு செய்யப்பட்டது.

ஆனால், அந்த பட்டியலில், அய்யப்பன்தாங்கல் இடம் பெறவில்லை.தற்போது, மாங்காடு பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளதால், அத்துடன் அய்யப்பன்தாங்கலையும் இணைக்க உள்ளதாக கூறப்படுகிறது.மக்கள் கருத்தை கேட்காமலேயே, ஒவ்வொரு ஊராட்சியிலும் தன்னிச்சையாக இணைப்பு தீர்மானங்கள் இயற்றப்படுகின்றன.திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சில பகுதிகள், அரக்கோணத்தை உள்ளடக்கி, சென்னை பெருநகர பகுதியை விரிவாக்குதல் குறித்து பொதுமக்களிடம் கருத்துகேட்கப்படும் என, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.வேகமாக வளர்ந்து வரும் அய்யப்பன்தாங்கல் ஊராட்சியை, மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X