சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருடனை விரட்டி பிடித்த ஆயுதப்படை பெண் போலீஸ்

Added : செப் 07, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை : சென்ட்ரல் பஸ் நிலையத்தில், முதியவரின் மொபைல் போனை பறித்து ஓடிய திருடனை, பெண் போலீஸ் விரட்டி சென்று பிடித்தார்.சென்னை, பூங்கா நகர், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த, தாமோதரன், 70. இவர், நேற்று, திருவான்மியூரில் இருந்து, மாநகர பேருந்தில், சென்ட்ரல் எம்.ஜி.ஆர்., ரயில் நிலையம் வந்தார். பஸ்சில் இருந்து தாமோதரன் இறங்கும்போது, பஸ்சில் இருந்த வாலிபர் ஒருவர், அவரது மொபைல்
 திருடனை விரட்டி பிடித்த  ஆயுதப்படை பெண் போலீஸ்

சென்னை : சென்ட்ரல் பஸ் நிலையத்தில், முதியவரின் மொபைல் போனை பறித்து ஓடிய திருடனை, பெண் போலீஸ் விரட்டி சென்று பிடித்தார்.

சென்னை, பூங்கா நகர், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த, தாமோதரன், 70. இவர், நேற்று, திருவான்மியூரில் இருந்து, மாநகர பேருந்தில், சென்ட்ரல் எம்.ஜி.ஆர்., ரயில் நிலையம் வந்தார். பஸ்சில் இருந்து தாமோதரன் இறங்கும்போது, பஸ்சில் இருந்த வாலிபர் ஒருவர், அவரது மொபைல் போனை பறித்து, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஓடினார்.அந்த நபரை, அருகில் இருந்த சிலர் பிடிக்க துரத்தினர். இதை, அந்த வழியாக பணி முடித்து வந்த, ஆயுதப்படை பெண் போலீஸ் இந்திராணி கவனித்தார்.

அவர் திருடனை விரட்டி பிடித்து, பூக்கடை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.போலீசாரின் விசாரணையில், அந்த நபர் வியாசர்பாடியைச் சேர்ந்த பிரகாஷ், 28, என்பதும் ஆவடி, சி.எம்.பி.டி., உட்பட, சில காவல் நிலையங்களில், வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, மொபைல் போன் மீட்கப்பட்டு முதியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
07-செப்-202119:52:20 IST Report Abuse
JeevaKiran அம்மணியின் தைரியத்திற்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
07-செப்-202105:54:29 IST Report Abuse
Taas Vyas வாழ்க முறத்தால் புலியை அடித்துத்.துரத்திய தமிழச்சி வழித்தோன்றல்,அந்த சகோதரி நல்வளமும் வாழவும் மென்மேலும் மக்கள் பணி செய்து புகழடைய வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X