சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்விரோத தகராறு இருவருக்கு கத்திக்குத்து

Added : செப் 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி : வாணரப்பேட்டையில்முன்விரோத தகராறில் இருவருக்கு கத்திக்குத்து விழுந்தது.வாணரப்பேட்டை பிரான்சுவா தோட்டத்தைச் சேர்ந்தவர் அகஸ்டின்ராஜ், 23; டிரைவர். இவருக்கும், எதிர் வீட்டில் வசிக்கும் ஜனா குடும்பத்திற்கும் முன் விரோதம் உள்ளது.நேற்று முன்தினம் அகஸ்டின்ராஜ், நண்பர் வினோத் உள்ளிட்டோருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஆட்டுப்பட்டி பரத், சந்தோஷ்

புதுச்சேரி : வாணரப்பேட்டையில்முன்விரோத தகராறில் இருவருக்கு கத்திக்குத்து விழுந்தது.வாணரப்பேட்டை பிரான்சுவா தோட்டத்தைச் சேர்ந்தவர் அகஸ்டின்ராஜ், 23; டிரைவர். இவருக்கும், எதிர் வீட்டில் வசிக்கும் ஜனா குடும்பத்திற்கும் முன் விரோதம் உள்ளது.நேற்று முன்தினம் அகஸ்டின்ராஜ், நண்பர் வினோத் உள்ளிட்டோருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஆட்டுப்பட்டி பரத், சந்தோஷ் ஆகியோருடன் வாய் தகராறு ஏற்பட்டது

.இதை அறிந்த ஜனா, அவரது மனைவி காயத்ரி, பரத், சந்தோஷ் ஆகியோருடன் சென்று, அகஸ்டின்ராஜ், வினோத்தை தாக்கினர்.தப்பி ஓடிய அகஸ்டின்ராஜ், நண்பர் ஜான்சன் வீட்டின் எதிரில் தஞ்சமடைந்தார். துரத்தி வந்த ஜனா, சிறிய கத்தியால் அகஸ்டின்ராஜை குத்தியுள்ளார். தடுக்க வந்த ஜான்சனுக்கும் கத்திக்குத்து விழுந்தது. ஜனா உள்ளிட்ட நான்கு பேர் மீது ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X