கவர்னர், முதல்வருக்கு இந்து முன்னணி நன்றி | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கவர்னர், முதல்வருக்கு இந்து முன்னணி நன்றி

Added : செப் 07, 2021
Share
புதுச்சேரி : புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி அளித்த கவர்னர், முதல்வருக்கு இந்து முன்னணி சார்பில் நன்றி தெரிவித்துள்ளது.இந்து முன்னணி மாநிலத் தலைவர் சனில்குமார் விடுத்துள்ள அறிக்கை:விநாயகர் சதுர்த்தி விழாவை நம்பி தொழில் செய்வோர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டனர். எனவே, இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதிக்குமாறு கவர்னர்,

புதுச்சேரி : புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி அளித்த கவர்னர், முதல்வருக்கு இந்து முன்னணி சார்பில் நன்றி தெரிவித்துள்ளது.

இந்து முன்னணி மாநிலத் தலைவர் சனில்குமார் விடுத்துள்ள அறிக்கை:விநாயகர் சதுர்த்தி விழாவை நம்பி தொழில் செய்வோர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டனர். எனவே, இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதிக்குமாறு கவர்னர், முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்று புதுச்சேரி மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி அளித்துள்ளனர்.இதற்காக கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். கொரோனாவை காரணம் காட்டி விநாயகர் சதுர்த்தி விழாவை தடை செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கோரிக்கை வைத்துள்ளதை கண்டிக்கிறோம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X