ஓட்டல் ஊழியர் மீது தாக்கு: போதை ஆசாமிகள் கைது

Added : செப் 07, 2021
Share
Advertisement
கே.கே.நகர் : மது போதையில் ஓட்டல் ஊழியரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.எம்.ஜி.ஆர்., நகர், நெடுஞ்செழியன் தெருவைச் சேர்ந்தவர், மாணிக்கம், 53. இவர் கே.கே.நகர் முனுசாமி சாலையில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம் ஓட்டலில் சாப்பிட வந்த இருவர்கள், பில்லை கொடுத்த போது, பணம் தர மறுத்து தகராறு செய்தனர்.மேலும், கண்ணாடி குவளையால் மாணிக்கத்தின்

கே.கே.நகர் : மது போதையில் ஓட்டல் ஊழியரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

எம்.ஜி.ஆர்., நகர், நெடுஞ்செழியன் தெருவைச் சேர்ந்தவர், மாணிக்கம், 53. இவர் கே.கே.நகர் முனுசாமி சாலையில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம் ஓட்டலில் சாப்பிட வந்த இருவர்கள், பில்லை கொடுத்த போது, பணம் தர மறுத்து தகராறு செய்தனர்.மேலும், கண்ணாடி குவளையால் மாணிக்கத்தின் தலையில் தாக்கியதில் பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து, ஓட்டல் ஊழியர்கள், அந்த இரு நபர்களை மடக்கி பிடித்து கே.கே.நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில் பிடிபட்ட நபர்கள், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த சிவா, 44, மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த திலீப்குமார், 44, என தெரியவந்தது.இருவரும் மது போதையில் தகராறு செய்ததும் தெரியவந்தது. இயைடுத்து, கே.கே.நகர் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X