வரும் 13ம் தேதி பி.எப்., குறைதீர் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வரும் 13ம் தேதி பி.எப்., குறைதீர் கூட்டம்

Added : செப் 07, 2021
Share
சென்னை : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியமான இ.பி.எப்., அலுவலகத்தில், செப்டம்பர் மாதத்துக்கான குறைதீர் கூட்டம், வரும் 13ம் தேதி நடக்க உள்ளது.இது குறித்து, சென்னை தெற்கு மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கமிஷனர் ஹங்சிங் வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை, தெற்கு மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில், 'நிதி ஆப்கே நிகட்' எனும் குறை தீர்க்கும் கூட்டம், ஒவ்வொரு

சென்னை : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியமான இ.பி.எப்., அலுவலகத்தில், செப்டம்பர் மாதத்துக்கான குறைதீர் கூட்டம், வரும் 13ம் தேதி நடக்க உள்ளது.

இது குறித்து, சென்னை தெற்கு மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கமிஷனர் ஹங்சிங் வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை, தெற்கு மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில், 'நிதி ஆப்கே நிகட்' எனும் குறை தீர்க்கும் கூட்டம், ஒவ்வொரு மாதமும் 10ம் தேதி நடக்கும்.

ஆனால், இம்மாதம் விநாயகர் சதுர்த்தி விடுமுறை வருவதால், இந்த கூட்டம் 13ம் தேதி நடக்க உள்ளது.இதில், வைப்பு நிதி சந்தாதாரர்கள், ஓய்வூதியர்கள், பணியாளர்கள் ஆகியோர், தங்களின் குறைகள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் பங்கேற்று, குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X