நாராயணசாமிக்கு | Dinamalar

பொது செய்தி

இந்தியா

நாராயணசாமிக்கு

Added : செப் 07, 2021
Share
புதுச்சேரி : பேனர் தடை சட் டத்தை அரசு செயல்படுத்தவில்லை என அ.தி.மு.க., குற்றம் சாட்டி உள்ளது.அ.தி.மு.க., கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் அளித்த பேட்டி:தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பாராட்டை பெற, புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடக் கூடாது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்து, மத ரீதியில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.தனது

புதுச்சேரி : பேனர் தடை சட் டத்தை அரசு செயல்படுத்தவில்லை என அ.தி.மு.க., குற்றம் சாட்டி உள்ளது.அ.தி.மு.க., கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் அளித்த பேட்டி:தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பாராட்டை பெற, புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடக் கூடாது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்து, மத ரீதியில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

தனது ஆட்சியின்போது பட்ஜெட்டில் அறிவித்ததை 5 ஆண்டுகள் கடந்தும் முழுவதும் செயல்படுத்தாத நாராயணசாமி, தற்போதைய பட்ஜெட்டில் அறிவித்ததை 6 மாதத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் என கூறுவது வேடிக்கையாக உள்ளது.ராஜ்யசபா தேர்தல் அறிவிப்புக்கு பின்பு, தலைமை கழகத்தை அணுகி, புதுச்சேரியில் அ.தி.மு.க.விற்கு வழங்க வலியுறுத்துவோம்.புதுச்சேரியில் பேனர் வைப்பதற்கான தடையை போலீசார், வருவாய், உள்ளாட்சி என யாரும் மதிப்பது கிடையாது.தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்கும் சட்டத்தை அமல் படுத்த முதல்வரை சந்தித்து வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X