பொது செய்தி

தமிழ்நாடு

நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை துாய்மை பணியாளர்கள் பயனடையலாம்

Added : செப் 07, 2021
Share
Advertisement
சென்னை : நல வாரியத்தில், துாய்மை பணியாளர்களை சேர்க்கும் பணி தீவிரமாக நடக்கிறது.தமிழ்நாடு ஆதிதிராவிடர்வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகமான 'தாட்கோ' கீழ், 2008 முதல், தமிழக துாய்மை பணியாளர்கள் நல வாரியம் செயல்பட்டு வருகிறது.இதன் மூலம், பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் பணிபுரியும் துாய்மைப் பணியாளர்களை கண்டறிந்து, வாரியத்தில்

சென்னை : நல வாரியத்தில், துாய்மை பணியாளர்களை சேர்க்கும் பணி தீவிரமாக நடக்கிறது.தமிழ்நாடு ஆதிதிராவிடர்வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகமான 'தாட்கோ' கீழ், 2008 முதல், தமிழக துாய்மை பணியாளர்கள் நல வாரியம் செயல்பட்டு வருகிறது.

இதன் மூலம், பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் பணிபுரியும் துாய்மைப் பணியாளர்களை கண்டறிந்து, வாரியத்தில் சேர்க்கும் பணிகளும் மும்முரமாக நடக்கின்றன.இது குறித்து, தாட்கோ அதிகாரிகள் கூறியதாவது: தொழிலாளர்களுக்கான அமைப்பு சாரா நலவாரியம் போலவே, துாய்மைப் பணியாளர்களுக்கு தனி நலவாரியம் செயல்படுகிறது.

வாரியத்தில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு, கல்வி உதவித்தொகை மற்றும் திருமண உதவித்தொகை வழங்கப்படுகிறது.அதேபோல், முதியோருக்கு மாதாந்திர ஊதியத்தொகையும் வழங்கப்படுகிறது. இத்திட்டங்களில் பயன்பெற அரசு, அரசு சாரா மற்றும் அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் பயன்பெற முடியாது. இதுவரை, வாரியத்தில் 1,703 பேர் உறுப்பினராக பதிவு செய்துள்ளனர்.மேலும், 20 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகள் நடக்கின்றன. அதற்காக மண்டல அலுவலர்களிடம் விண்ணப்பங்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X