பொது செய்தி

இந்தியா

மாணவர்களுக்கு கொரோனா செவிலியர் கல்லுாரி மூடல்

Added : செப் 07, 2021
Share
Advertisement
பாகூர் : புதுச்சேரியில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவர்கள் மூவர் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், கல்லூரி நேற்று மூடப்பட்டது.புதுச்சேரியில் கொரோனா பரவல் தாக்கம் குறைந்துள்ள நிலையில், கடந்த 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லுாரிகள் திறக்கப்பட்டு, சுழற்சி முறை யில் இயங்கி வருகின்றன.கிருமாம்பாக்கத்தில் இயங்கி வரும் தனியார் செவிலியர் கல்லுாரி மாணவர்கள் 3

பாகூர் : புதுச்சேரியில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவர்கள் மூவர் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், கல்லூரி நேற்று மூடப்பட்டது

.புதுச்சேரியில் கொரோனா பரவல் தாக்கம் குறைந்துள்ள நிலையில், கடந்த 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லுாரிகள் திறக்கப்பட்டு, சுழற்சி முறை யில் இயங்கி வருகின்றன.கிருமாம்பாக்கத்தில் இயங்கி வரும் தனியார் செவிலியர் கல்லுாரி மாணவர்கள் 3 பேருக்கும், பேராசிரியர் ஒருவருக்கும், சில நாட்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.அவரவர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். அதில், நான்கு பேருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது.இது குறித்து தகவலறிந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் நேற்று கல்லுாரிக்கு சென்று, மாணவர்கள் மற்றும் ஊழியர்களை வெளியேற்றினர்.பின்னர், கல்லூரி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு, தற்காலிகமாக மூடப் பட்டது.தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள் மற்றும் ஊழியர்கள், கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப் பட்டது.புதுச்சேரியில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு பள்ளி, கல்லுாரிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், செவிலியர் கல்லுாரி மாணவர்கள் உள்பட 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X