பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் கலெக்டர் அலுவலகம்

Added : செப் 07, 2021
Share
Advertisement
சென்னை : கொரோனாவை வரவேற்கும் விதமாக, சென்னை கலெக்டர் அலுவலகத்தில், சமூக இடைவெளியின்றி, தினமும் மக்கள் கூட்டம் குவிவதால், ஊழியர்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தின் பின்புறத்தில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு புகைப்படம் எடுக்கும் மையம் செயல்படுகிறது.இத்திட்டத்திற்கு புகைப்படம் எடுக்க, சென்னையில், இந்த ஒரு மையம்

சென்னை : கொரோனாவை வரவேற்கும் விதமாக, சென்னை கலெக்டர் அலுவலகத்தில், சமூக இடைவெளியின்றி, தினமும் மக்கள் கூட்டம் குவிவதால், ஊழியர்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தின் பின்புறத்தில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு புகைப்படம் எடுக்கும் மையம் செயல்படுகிறது.

இத்திட்டத்திற்கு புகைப்படம் எடுக்க, சென்னையில், இந்த ஒரு மையம் மட்டுமே உள்ளது. இதனால், இங்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடுவதால், மீண்டும் கொரோனா தொற்றுக்கு, சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் இடமாக மாறி வருகிறது.இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:முக கவசமின்றி, சமூக இடைவெளி பின்பற்றாமல், கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் கூடுகின்றனர். ஒட்டுமொத்தமாக, தினமும் மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால், தொற்று அதிகரிக்கும்.

இது குறித்து, பல முறை புகார் எழுந்தும், கலெக்டர் விஜயராணி அலட்சியம் காட்டுகிறார். கலெக்டர், முதல்வர் பிரிவு மனுவிற்கு காட்டும் ஆர்வத்தை, மக்களின் நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.எத்தனையோ திட்டங்களுக்கு அரசு 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க வழிவகை செய்துள்ளது. அதேபோல், முதல்வர் காப்பீடு திட்டத்திற்கும், விண்ணப்பிக்க அரசு பரிசீலிக்க வேண்டும்.மேலும், தாலுகா மற்றும் மண்டல அலுவலகங்களில் கூடுதல் மையங்கள் திறக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X