பொது செய்தி

இந்தியா

குற்றவாளிகளுடன் தொடர்பு

Added : செப் 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி : 'குற்றவாளிகளுடன் தொடர்பில் இருக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என' டி.ஜி.பி., ரன்வீர்சிங் கிருஷ்ணியா கூறினார்.புதுச்சேரியில் கஞ்சா விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் தெரிவித்தார்.இந்நிலையில், புதுச்சேரி சட்டம் ஒழுங்கு போலீஸ் ஆலோசனை கூட்டம், டி.ஜி.பி., அலுவலகத்தில் நேற்று நடந்தது.

புதுச்சேரி : 'குற்றவாளிகளுடன் தொடர்பில் இருக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என' டி.ஜி.பி., ரன்வீர்சிங் கிருஷ்ணியா கூறினார்.புதுச்சேரியில் கஞ்சா விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் தெரிவித்தார்.

இந்நிலையில், புதுச்சேரி சட்டம் ஒழுங்கு போலீஸ் ஆலோசனை கூட்டம், டி.ஜி.பி., அலுவலகத்தில் நேற்று நடந்தது. டி.ஜி.பி., ரன்வீர்சிங் கிருஷ்ணியா தலைமை தாங்கினார்.ஏ.டி.ஜி.பி. அனந்தமோகன், எஸ்.பி.க்கள் இன்ஸ்பெக்டர்கள், சப்இன்ஸ்பெக்டர் கள் கலந்து கொண்டனர். காரைக்கால் மாவட்ட போலீ சார் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்றனர்.கூட்டத்தில், நிலுவையில் உள்ள குற்ற வழக்கு களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கஞ்சா விற்பனை, விபசாரம் முற்றிலும் ஒழிக்கப்பட வேணடும். புகார் அளிப் போரை அலைக்கழிக்க கூடாது. புகார்கள் மீது உடனே விசாரணை நடத்தி வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஜி.பி., அறிவுறுத்தினார்.மேலும் அவர் பேசுகை யில், 'என்னுடைய தனிப்படையினர் நேரடியாக சென்று, கஞ்சா விற்பனை, விபசாரம், கிளப் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்தால், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரி மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுப்பேன். சில போலீசார் கஞ்சா விற்பனை, விபசார கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வருகிறது. அவ்வாறு தொடர்பில் இருப்பது தெரிய வந்தால், போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன்.ஒவ்வொரு போலீஸ் நிலைய அதிகாரிகளையும் நான் கவனித்து வருகிறேன். ஒரு குழுவை ஏதாவது ஒரு போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைப்பேன். போலீசார் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை கவனித்து, நடவடிக்கை எடுப்பேன்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X