பொது செய்தி

தமிழ்நாடு

சிலுவை படத்துடன் வலம் வரும் குப்பை வண்டி மாநகராட்சி விளக்கம் என்னாச்சு?

Added : செப் 07, 2021
Share
Advertisement
சென்னை : சென்னை மாநகராட்சி குப்பை வண்டியில் இடம் பெற்றுள்ள மதக்குறியீடு அகற்றப்படாதது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் தினமும் சேகரிக்கப்படும் 5,100 டன் குப்பையை கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்ல,'காம்பாக்டர்' மற்றும் கனரக வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.இந்த குப்பை வண்டிகளில் மாநகராட்சி 'லோகோ' அல்லது

சென்னை : சென்னை மாநகராட்சி குப்பை வண்டியில் இடம் பெற்றுள்ள மதக்குறியீடு அகற்றப்படாதது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் தினமும் சேகரிக்கப்படும் 5,100 டன் குப்பையை கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்ல,'காம்பாக்டர்' மற்றும் கனரக வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.இந்த குப்பை வண்டிகளில் மாநகராட்சி 'லோகோ' அல்லது திடக்கழிவு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்களும், அது குறித்த குறியீடுகளும் இடம்பெற்றிருக்கும்.இந்நிலையில், குப்பை அகற்றும் வாகனங்கள் சிலவற்றில், சென்னை மாநகராட்சி 'லோகோ'விற்கு பதிலாக, சிலுவை படம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து நம் நாளிதழ், ஆக., 10ம் தேதி செய்தி வெளியிட்ட போது, 'இது வண்ணம் பூசுபவர்களின் தவறால் நடந்துள்ளது.

இது குறித்து அறிந்த பின், உடனடியாக மத குறியீடு அகற்றப்பட்டுள்ளது' என, மாநகராட்சி விளக்கம் அளித்தது.ஆனால், இதுவரை குப்பை வண்டிகளில் உள்ள சிலுவை படத்தை மாநகராட்சி அகற்றவில்லை. குறிப்பாக, அண்ணா நகர் மண்டலம் சூளைமேடு பகுதியில், மாநகராட்சியின் குப்பை வண்டி எண், டி.என். 04 எ.பி.9048 என்ற வாகனத்தில், இன்னமும் சிலுவை குறியீடு அப்படியே உள்ளது.இந்த மண்டலத்தில், சென்னை மாநகராட்சி நேரடியாக குப்பையை கையாளுகிறது. இதனால், இதுபோன்று எத்தனை வாகனங்களில் மத குறியீடு இடம்பெற்றுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.அரசின் சொத்தில் நேரடியாக மத குறியீடு அமைத்திருப்பது, அனைத்து தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X