பொது செய்தி

தமிழ்நாடு

சமூக ஆர்வலர் திடீர் போராட்டம்

Added : செப் 07, 2021
Share
Advertisement
குரோம்பேட்டை : பல்லாவரம் நகராட்சியை, சென்னை மாநகராட்சியுடன் இணைக்கக் கோரி, குரோம்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் கவன ஈர்ப்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்றார். தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார், செம்பாக்கம் நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளை இணைத்து, தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படும் என, தமிழக அரசு, சமீபத்தில் அறிவித்தது.இந்த அறிவிப்புக்கு,

குரோம்பேட்டை : பல்லாவரம் நகராட்சியை, சென்னை மாநகராட்சியுடன் இணைக்கக் கோரி, குரோம்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் கவன ஈர்ப்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்றார்.

தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார், செம்பாக்கம் நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளை இணைத்து, தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படும் என, தமிழக அரசு, சமீபத்தில் அறிவித்தது.இந்த அறிவிப்புக்கு, குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல்லாவரத்தை, சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், குரோம்பேட்டை மூத்த குடிமக்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், 66 என்பவர், பல்லாவரத்தை, சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வலியுறுத்தி, குரோம்பேட்டை தபால் நிலையம் எதிரே, நேற்று காலை, கையில் பதாகையுடன் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடத்த முயன்றார். போலீசார் பேச்சு நடத்தி அவரை சமாதானம் செய்து அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X