பொது செய்தி

தமிழ்நாடு

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஒரு குடம் இரண்டு ரூபாய்

Added : செப் 07, 2021
Share
Advertisement
திருப்புவனம் : திருப்புவனம் அருகே மணலுார் ஊராட்சியில் மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஒரு குடம் இரண்டு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது வரவேற்பை அளித்துள்ளது.மணலுார் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மதுரைக்கு வெகு அருகாமையில் அமைந்திருப்பதால் பலரும் நகரில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். ஊராட்சி சார்பில்

திருப்புவனம் : திருப்புவனம் அருகே மணலுார் ஊராட்சியில் மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஒரு குடம் இரண்டு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது வரவேற்பை அளித்துள்ளது.

மணலுார் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மதுரைக்கு வெகு அருகாமையில் அமைந்திருப்பதால் பலரும் நகரில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். ஊராட்சி சார்பில் நகரின் மையப்பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தினசரி ஒரு குடம் இரண்டு ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

ஊராட்சி தலைவர் அரசி கூறுகையில்; தினசரி 500 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது. முகூர்த்த நாட்களில் 2 ஆயிரம் லிட்டர் வரை விற்பனை செய்கிறோம், உரிய பராமரிப்பு, தடையின்றி குடிநீர் விநியோகம் உள்ளிட்ட காரணங்களால் மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

பெரும்பாலான தொற்று நோய்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காததே காரணம், அதனை கருத்தில் கொண்டு மணலுாரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்து வருகிறோம், என்றார்.திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் மணலூர், கொந்தகை, கழுகேர்கடை, கரிசல்குளம், மாரநாடு, லாடனேந்தல் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் சுத்திகரிக்கும் இயந்திரம் இருந்தாலும், மணலுார், கொந்தகை ஆகிய இடங்களில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X