பொது செய்தி

தமிழ்நாடு

நுாறுநாள் வேலை திட்டத்தில் தொடரும் முறைகேடு

Added : செப் 07, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் நுாறு நாள் வேலை திட்டங்களில் 60 சதவீதம் பொருட்கள் 40 சதவீதம் பணியாளர்கள் கூலி என்ற விகிதத்தை பின்பற்றாமல் தொடர்ந்து முறைகேடு நடந்து வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.சிவகங்கை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி திட்ட முகமை சார்பில் 445 ஊராட்சிகளில் நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் 60 சதவீதம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் நுாறு நாள் வேலை திட்டங்களில் 60 சதவீதம் பொருட்கள் 40 சதவீதம் பணியாளர்கள் கூலி என்ற விகிதத்தை பின்பற்றாமல் தொடர்ந்து முறைகேடு நடந்து வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி திட்ட முகமை சார்பில் 445 ஊராட்சிகளில் நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் 60 சதவீதம் மூலப்பொருட்களுக்கும் 40 சதவீதம் பணியாளர்களுக்கும் ஊதியமாக வழங்கிடும் வகையில் பணிகள் செய்யப்பட வேண்டும்.கிராமப்புறங்களில் சிறு பாலங்கள் அமைத்தல், தடுப்பணைகள் அமைத்தல், மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்தல் போன்ற பணிகள் நடந்து வருகிறது. அதிகாரிகள் நுாறு நாள் வேலை திட்டத்தில் 60:40 விகிதத்தை பின்பற்றுவதில்லை.

ஊராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப பணிகள் வழங்கப்படுவதில்லை. அதிகாரிகள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையிலேயே பணி ஒதுக்கீடு செய்து வருவதாக புகார் உள்ளது. சிறிய ஊராட்சிகளுக்கு அதிகளவு திட்டப்பணி, பெரிய ஊராட்சிகளுக்கு குறைந்தளவு பணி மட்டுமே வழங்குகின்றனர்.

ஊராட்சித்தலைவர்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் வெங்கடேசன் கூறியதாவது: அதிகாரிகள் நுாறு நாள் வேலை திட்டத்தில் 60:40 என்ற விகிதத்தினை கடைப்பிடிப்பதில்லை. தங்கள் விருப்பு, வெறுப்பு அடிப்படையில் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதிகாரிகள் சிலர் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஒதுக்கீட்டுப்படி பணிகளை ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X