ஜல்லிக்கட்டு காளை மாயம்; விவசாயி தவிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு காளை மாயம்; விவசாயி தவிப்பு

Added : செப் 07, 2021
Share
திருப்புவனம் : திருப்புவனம் அருகே ஜல்லிக்கட்டு காளை மாயமானதால் விவசாயி குடும்பம் பரிதவித்து வருகிறது. திருப்புவனத்தைச் சுற்றிலும் விவசாயிகள் பலரும் ஜல்லிகட்டு மற்றும் வடமாடு மஞ்சுவிரட்டு உள்ளிட்டவற்றிற்கு காளைகளை வளர்த்து வருகின்றனர்.திருப்புவனம் அருகே அகரத்தைச் சேர்ந்த விவசாயி கர்ணன்வீட்டில் ஏழு ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். இரு வருடங்களுக்கு

திருப்புவனம் : திருப்புவனம் அருகே ஜல்லிக்கட்டு காளை மாயமானதால் விவசாயி குடும்பம் பரிதவித்து வருகிறது.

திருப்புவனத்தைச் சுற்றிலும் விவசாயிகள் பலரும் ஜல்லிகட்டு மற்றும் வடமாடு மஞ்சுவிரட்டு உள்ளிட்டவற்றிற்கு காளைகளை வளர்த்து வருகின்றனர்.திருப்புவனம் அருகே அகரத்தைச் சேர்ந்த விவசாயி கர்ணன்வீட்டில் ஏழு ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். இரு வருடங்களுக்கு முன் 25ஆயிரம் ரூபாய் கொடுத்து கன்று வாங்கி ஜல்லிகட்டு விழாவிற்காக பழக்கி வந்துள்ளார்.

மேய்ச்சலுக்கு விட்டிருந்த ஜல்லிக்கட்டு காளை மாயமானது.இதுவரை 5 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்தும் காளையை கண்டு பிடிக்க முடியவில்லை. தற்போது நோட்டீஸ் அச்சடித்து திருப்புவனம், மானாமதுரை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X