பொது செய்தி

இந்தியா

மணக்குள விநாயகர் கல்விக் குழும நிறுவனர் கேசவன் நினைவு தினம்

Added : செப் 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி : மணக்குள விநாயகர் கல்விக் குழும நிறுவனரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான கேசவனின் பத்தாம் ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.அவரது இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் கேசவன் படத்திற்கு, முதல்வர் ரங்கசாமி மலர் துாவி அஞ்சலி செலுத்தினார். மணக்குள விநாயகர் கல்வி நிறுவனங்களின் தலைவர் தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், மறைந்த கேசவனின் மகனும், கல்வி

புதுச்சேரி : மணக்குள விநாயகர் கல்விக் குழும நிறுவனரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான கேசவனின் பத்தாம் ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது

.அவரது இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் கேசவன் படத்திற்கு, முதல்வர் ரங்கசாமி மலர் துாவி அஞ்சலி செலுத்தினார். மணக்குள விநாயகர் கல்வி நிறுவனங்களின் தலைவர் தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், மறைந்த கேசவனின் மகனும், கல்வி நிறுவனங்களின் செயலாளருமான டாக்டர் நாராயணசாமி கேசவன் மற்றும் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்பட பலரும் அஞ்சலி செலுத்தினர்.மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி, மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரி, வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லுாரி, மணக்குள விநாயகர் பாலிடெக்னிக் கல்லுாரி ஆகிய கல்வி நிறுவனங்களிலும் கேசவன் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், மயிலம் பொறியியல் கல்லுாரி, மணக்குள விநாயகர் சாப்ட்வேர் சொல்யூஷன், மணக்குள விநாயகர் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர், மயிலம் செவிலியர் கல்லுாரி, மயிலம் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மெண்ட், மயிலம் இன்ஸ்டிடியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்ஸ் ஆகிய கல்வி நிறுவனங்களிலும் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.
மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி இயக்குனர் ராஜகோவிந்தன், துணை இயக்குனர் காக்னே, டீன் கார்த்திகேயன், மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரகாஷ், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி இயக்குனர் வெங்கடாஜலபதி, இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் மலர்கண், மயிலம் பொறியியல் கல்லுாரி முதல்வர் செந்தில், செவிலியர் கல்லுாரி முதல்வர் தனுசு, பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் காஞ்சனா, கல்வியியல் கல்லுாரி முதல்வர் டைனிஜோசப், பேராசிரியர்கள், டாக்டர்கள், ஊழியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X